ஜனநாயக ஆட்சிக்காக ஒன்றிணையுங்கள்

யாழ்.மொழி வழக்கிற்கு வானொலி நாடகங்களை மாற்றி அமைத்த கே.எஸ்.பாலா - பி.எச்.அப்துல் ஹமீத்

இந்திய கலாசார  நிலையத்தின் ஏற்பாட்டில்  இடம்பெற்ற 
நினைவு நிகழ்வில்  பி.எச்.அப்துல் ஹமீத் ஆற்றிய உரை 






அரங்கில்  இருக்கைகளின்றி  வெறிச்சோடிக்காணப்பட்ட  சபையில்  அதி பார்வையாளர்களை   கொண்ட நிகழ்வொன்று  வழமைக்கு மாறான முறையில்  கொழும்புச் தமிழ்ச் சங்கத்தில்  நடைபெற்றது.
வழமையில் கொழும்பு  தமிழ்ச்சங்கத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் பலவற்றுக்கு  அதன் சங்கரப்பிள்ள மண்டபம் முழுவதுமாக  பார்வையாளர்களால்
 நிரம்புவதில்லை.  அவ்வாறு நிரம்பினாலும் அந்நிகழ்வு  நிறைவுபெறும் வரை பிரதேச  எண்ணிக்கையிலான  சபையோரைக் காணமுடியாது.
ஆ னால்   இதற்கு எதிரான ஒரு நிலைமை  கடந்த ஞாயிற்றுக்கிழøமை கொழும்பு  தமிழ்ச் சங்கத்தில் காணப்பட்டது.
முதற் பிரதிகள்  பெறுபவர்களின்  பெயர்கள்  வாசிக்கப்படவில்லை. அவை அச்சிடப்படவும் இல்லை.  பிரதம விருந்தினர்கள் ஆய்வுரையாளர்கள்  இல்லை அரங்கில்  அவர்களுக்கான  ஆசனங்களும்  இல்லை. மாறாக  மேடையின்  ஒரு மூலையில்  புகைப்படம்  ஒன்றிற்கு  முன்  குத்து  விளக்கேற்றப்பட்டு  மாலை  அணிவிக்கப்பட்டிருந்தது. ச கண்ணாடி  பிறேமிற்குள்  நீண்ட தாடியுடன்  கூடியன முகம் அதே முகம் அரங்கின் நடுவில்  திரையில்  பாராஜெகடர் மூலமாக இந்தச் சூழலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  நிகழ்வுக்குரியவர்கள்  அண்மையில்  காலமான  பல்திறன்  கலைஞர்  கே.எஸ்.பாலச்சந்திரன் .
அவரது நினைவு நிகழ்வே இந்திய கலாசார நிலையத்தினால்  இவ்வாறாக  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 அவரது ஆற்றுகைகள்  எவ்வாறு  மக்கள் மத்தியில் சென்றடைந்தன.  என்பதையும்  அவரை  அம்மக்கள்  எவ்வாறு  நேசித்திருந்தனர் என்பதையும் அன்றை நிகழ்வுக்காக  குவிந்த சபைக் கூட்டத்தின் மூலம் காண முடிந்தது.
கே.எஸ். பாலா என்ற பல்திறன் கலைஞர் குறித்த உரைகளுக்காக துறைசார் நண்பர்களான பி.எச். அப்துல் ஹமீட்  , ஆர்.யோகராஜன் , அருணா செல்லத்துறை  , கே.ரி. இளங்கோவன் ஆகியோர் அழைகக்ப்பட்டிருந்தனர். 
 இந்திய கலாசார நிலையத்தின் தலைவர்  எம். இராமச்சந்திரனின் ஆரம்ப உரையினை அடுத்து  ஏனையோரின் உரைகள் இடம்பெற்றிருந்தன. ஆர். யோகராஜனை  உரையாற்ற  அழைத்த பொழுது அவர் முன் வரிசையிலிரந்து எழவில்லை. சில நிமிடங்கள் சபையோர் அவரைத் தேடும் நிலையில் அவர் பின்  வரிசையிலிருந்து எழுந்து வந்து உரை நிகழ்த்தினார். அந்தளவிலற்கு அங்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்டிருந்தது.  
 உரையாளர்கள் ஒருவர் பின்வரிசை இருக்கையிலிரநது வந்து வரை  நிகழ்த்தியமை வழமைக்கு மாறான ஒரு காட்சியாக  இருந்தது.  
 யாழ். மொழி வழக்கு நகைச்சுவைக்கு மட்டும் தான் பயன்படும் என்ற  ிலைப்பாட்டினை மாற்றிமைத்து இந்திய மொழி வழக்கில் பெரும்பாலான வானொலி நாடகங்கள் வெளியாகியிருந்த நிலையில் யாழ். மொழி வழக்கில் வானொலி நாடகங்களை மாற்றி அமைத்த வரலாற்றில் அதிக முக்கியத்துவம் பெறுவர் கே.எஸ்.  பாலச்சந்திரன் என இங்கு  உரையாற்றிய பி.எச். அப்துல் ஹமீட குறிப்பிட்டார். 
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ;
1967 இல் அவர்  இளைஞர் அரங்கம் நிகழ்ச்சிக்காக  இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்திற்கு  வருகை தந்திருந்தார். அன்றைய காலப்பகுதியில்  இறைவரித் திணைக்களங்களின்  பணியாளராக கடமையாற்றிக்கொண்டிருந்தார்.
அதன் பின்னர்  எனக்கும் அவருக்குமான  நட்பு ஆழமாக  மேலோடியிருந்தது.  ஒரு நாள்  சுன்னாகம் பகுதியில்  இடம்பெற்ற நிகழ்ச்சி  ஒன்றை தொகுத்து  வழங்குவதற்காக  நானும் சி.நடராஜசிவமும் சென்றிருந்தோம். அன்றைய  காலத்தில்   அங்கு பெற்றோல்மக்ஸ்  விளக்குகள்  வீடுகளின்  முன்னால் ஒளிர்ந்து கொண்டிருந்தன.
நானும் நடராஜசிவமும் வெளியில்  வந்த பொழுது  மூன்றாம் வீட்டில் மிகமிக  சிவந்த மேனியுடைய  அழகான பெண் ஒருவர் நின்றுக்கொண்டிருப்பதைக் கண்டேன்  எப்படியாவது  அந்தப் பெண்ணின்  முகத்தினைக்  பார்த்து  விடவேண்டுமென்க்ஷீ  ஆசையினால்  இருவரும்  கிட்டச் சென்றபோது  அப் பெண் என்னை  நோக்கி கண்ணடித்தார்.  எனக்கோ  இன்ப அதிர்ச்சி இந்த  அழகுப் பதுமை  என்னை நோக்கி கண்ணடிப்பதா என வியந்துகொண்ட போதுஅ என்னடா  நான் வடிவா இருக்கிறனா என எமக்கு  பரிச்சயமான ஆண் குரல் கேள்வி எழுப்பியது.
பின்னர்தான் அறிந்து கொண்டோம்.  பெண்ணாக வேடமிட்டிருந்தவர் கே.எஸ்.பாலா  என்று அவ்வாறாக  தனக்கெனக  வழங்கப்படும் பாத்திரத்திற்குள்  உள்வாங்கப்பட்டு  திறனை வெளிப்படுத்துபவர் .  அவர் வழமைக்குமாறான  வகையில்  சிறப்பியல்புகளை உள்வாங்கி  நடிப்புத்திறனை  அவர் வெளிக்காட்டுவதில் வல்லவர்.
வானொலியின்  தேசிய சேவையில்  ஆரம்பகாலம் முதல் இந்தியப் பேச்சு வழக்கிலான நடகங்கள்தான்  அதிகளவில்  ஒலிபரப்பாகும். அதேவேளை  யாழ்ப்பாண  மொழிவழக்கு  நகைச்சுவைக்கு  மட்டும்தான்  பயன்படும்  என்ற நிலையில் இருந்தது.  லண்டன் கந்தையா  போன்ற நாடகங்கள்  அவ்வாறான  மொழிவழக்கில்  உருவானவை . இந்நிலையில்  வானொலி நாடகங்களின் மொழிவழக்கினை  மாற்றியமைத்து நமது மொழி நடையைப் பிரபலப்படுத்திய  வரலாற்றில்  கே.எஸ். பாலாவின்  பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
வானொலி  என்பது பல்காட்சி ஊடகம் என்பதனை  புரிந்துகொண்டு  மிகவும் சரியாகப் பயன்படுத்தியவர் கே.எஸ்.பாலா.
பல நாடகங்களை  அவர் எழுத நான்  தயாரித்துள்ளேன்.  அவை அழிக்கப்பட்ட  சோகம் ஒரு புறத்தில்  சில்லையூர்  செல்வராஜன்  மூலமாக  ஷேக்பியர்  நூற்றாண்டுக்காக எழுதப்பட்டு தயாரித்த  நாடகம் ஒலிபரப்பபட்டு மூன்று தினங்களில் அழிக்கப்பட்டது.
பின்னர் அந்த நாடகம்  நூலாக வெளிவந்திருந்த நிலையில்  க.பொ.த. உயர்தரத்திற்குரிய  பாடநூலாக  சிபாரிசு செய்யப்பட்டிருந்தது.
கே.எஸ். பாலாவை  அண்ணை றைற் பாலா  என்று பலர் அறிவார்கள்.  ஆனால் அவர் அதனை  விசாலமான  ஆழுமையோடு  எத்தனை துறைகளில்  பங்களிப்பினை  வழங்கி இருக்கின்றார். என்பது  ச்சரியமாக இருக்கும் அனைவருக்கும்.
அவர் பல நூல்களை எழுதியுள்ளார்.  வாசகர்களை  குறித்த சூழலுக்கு  இட்டுச் செல்லும் பக்குவம் அவரது நூல்களில்  காணப்பட்டது. ஒரு சிறந்த எழுத்தாளன்  என்பவன்  வாசகரனை  அந்த சூழலுக்கு  அழைத்துச்செல்ல வேண்டும். வாசகனின்  மனத்திரையில்  அக்காட்சிகள்  உருவாக வேண்டும். அதுமட்டுமல்ல  அந்த பாத்திராங்களாகபவாசகர்கள்  வாழும் அளவிற்கு  ஈர்க்கப்படவேண்டும். இவை அத்தனையும் அவரது நூலில் இருந்தன.
இந்தியாவின்  பெருமைக்குரிய அமுதன்  அடிகள்  விருது அவரது கரையைத் தேடும் கட்டுமரங்கள்  என்னும்  நாவலுக்கு  வழங்கப்பட்டது.
தோன்றாத் துணையாக  அவர் தெனாலி படத்துக்கு  எவ்வாறு  உதவினார். என்பதனை  குறிப்பிட வேண்டும். யாழ்ப்பாண தமிழில்  பேசிப் பழகவேண்டுமென கமலஹாசன்  என்னிடம் கோரியபோது  நான் அவருக்கு  கே.எஸ்.பாலச்சந்திரனுடைய  ஒலிநாடா ஒன்றினையே வழங்கியிருந்தேன். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த  ஒருவரது  ஒலிப்பேழையை தருகிறேன். எனக் கூறினேன்  இரு தினம் அவர்  என்னையும் உதவிக்கு அழைத்திருந்தார்.
தெனாலி படத்தின்  வெற்றிவிழாவில் நடிகர்  கமலஹாசன் கே.எஸ். பாலச்சந்தினுக்கும் நன்றி கூறியமை மறக்க முடியாத விடயம் கனடாவில்  தொலைக்காட்சி  ஒன்றிற்காக  பாலச்சந்திரன் ந செவ்விக் கண்டிருந்தார்.
இலங்கையில் திரைப்படங்களைக இயக்கிய அவர்  பின்னர் கனடாவில்  பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
ஐரோப்பாவில் வெளிவரும் ஒரு பேப்பர்  ஊடகத்திற்கு தனது பங்களிப்பினை  வழங்கினார்.. அதேவேளை  தமிழ் விக்கிபீடியாவிற்கு  136 கட்டுரைகள் எழுதியுள்ளார்.
வொண்டர்புள் வைற்றிலிங்கம் என்ற தொடர்  கனடாவில்  125 வாரங்கள் தொடராக  ஒளிபரப்பானது  என்னையும் அத்தொடரில்  கலந்துகொள்ள வைத்திருந்தார்.
கே.எஸ்.பாலாவின்  மறைவு தொடர்பாக  ஒரு இலத்திரனியல்  ஊடகத்திடம் அறிவித்தபோது  பாலச்சந்திரனா யார் அவர்  . எனக் கேட்டனராம். இது இளைய தலைமுறையினரின்  தவறெனக்கூற முடியாது. பதிவுகள் ஆவணப்படுத்தல்கள் இல்லை என்பதுதான்  காரணம்.
சிங்களசேவைகளில்  அது தொலைக்காட்சியாக இருந்தாலும் சரி வானொலியாக  இருந்தாலும் சரி கொழும்பு  ரேடியோ பதிவுகளைக் கூட ஆவணப்படுத்தி வைத்துள்ளனர். இலங்கை வானொலி  நிலையத்திற்குச் சென்றால் அங்கு சகல சிங்கள ஒலிபரப்பாளர்களினதும் படங்கள்  காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
ஆனால் தமிழ் சேவைக்கு  பங்களிப்புச்  செய்த ஒருவரது  புகைப்படம் கூட அங்கு இல்லை. பாலச்சந்திரனை மறந்த தலைமுறை  ஒன்று  இங்கு உள்ளது குறித்த துறைகளில் சம்பந்தப்பட்டவர்கள்  தமக்கு முன்னால்   அதேதுறையில் பயணித்தவர்கள் யார்  என்பதனை அறிந்து வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.