
நாம் எந்த உயர் நிலைக்கு சென்றாலும் பெருமைகள் எமை வந்தடைந்தாலும் அவை அனைத்துக்கும் காரணம் பெற்ற வயிறுதான் என்று கங்கை அமரன் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ராஜகுமர் சுவாமிகளின் அருளுரை நிகழ்வில் உரை நிகழ்த்தும் போதே கங்கை அமரன் இவ்வாறு கூறினார்.
சனிக்கிழமை எனக்கு விடுமுறை தினம் என்ற காரணத்தினால் ராமகிருஸ்ண மிசன் மண்டபத்தில் நடை பெட்ட இந்த நிகழ்வுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
நான் இந்த நிகழ்வுக்கு செல்லும்போது எனது நண்பர் ஒருவருக்கு தெரிவித்தேன் இப்பட்ய் ஒரு நிகழ்வு வெள்ளவத்தையில் நடைபெறுகின்றது நீரும் வருகின்றீரா
என. உனக்கு என்ன சித்து பிடித்து விட்டதா என அவர் என்னை நெடிந்தார். அவருக்கு புரிந்தது அவ்வளவுதான்.
குரிபிடத்தக்களவிலான மக்கள் பிரசன்னம் அங்கு இருந்தது. மக்களுடன் மக்களாக நானும் ஓர் ஓரமாக அமர்ந்து கொண்டென்.
சிறிது நேரத்தின் பின்னர் கங்கை அமரன் உரை ஆரம்பமாகியது.
கங்கை அமரனிற்கு வழங்கப்பட்ட தலைப்பு " சித்தர்களுடனான அனுபவங்கள்".
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாய் அன்றி வேறொன்று ஏது.. என்று கங்கை அமரன் ஆரம்பித்தர்.
என்னடா இது சினிமா உரை நிகழ்த்த வந்தாரா அல்லது சித்தர்கள் பற்றி உரைக்க வந்தாரா என்ர சந்தேகம் என்னுள்.
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாய் அன்றி வேறொன்று ஏது..என்ற பாடலை ஏன் ஒரு கடவுள் வாழ்த்தாக எடுக்கக் கூடாது என்றார்.
கடவுளை நமக்கு அடயாளம் காட்டியவ்ர்கள் சித்தர்கள் என்றும் கூறினார்.
இந்தியாவில் இருந்து இங்கு வந்து 30 நிமிடங்கள் மட்டுமே அவர் உரை நிகழ்த்தினார். எனது ஆவலை நிவர்த்தி செய்வதாக அந்த உரை அமையவில்லை.
என்னைப்போலவெ இன்னும் பலர் அவ்வாறான நிலைப்பாட்டுடன் அரங்கை விட்டு வெளியேறி இருக்கலாம்.
இந்த உரையின் முழு வடிவத்தையும் எழுத்து வடிவில் வெகு விரைவில் பதிவேற்றம் செய்வேன்.