ஜனநாயக ஆட்சிக்காக ஒன்றிணையுங்கள்

வோல் ஸ்ட்ரீட் ஆர்ப்பாட்டமும் அமெரிக்கா எதிர்னோக்கும் சவால்களும்


நன்றி: ஞாயிறு தினக்குரல்
யோ.நிமல்ராஜ்



மத்திய கிழக்கு நாடுகளில் ஆட்சி அதிகாரங்களை ஏகாதிபத்தியர்களிடமிருந்து பறித்துக் கொள்வதற்காக ஆரம்பித்த ஆர்ப்பாட்டங்கள் இன்று மேற்குலகின் வல்லரசு நாடுகளிலும் ஏதோ ஒரு கோரிக்கையை முன்வைத்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.





உலக நாடுகளை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு இயக்கவேண்டுமென அவாக் கொண்டிருக்கும் அமெரிக்க அசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள ஆர்ப்பாட்டமே வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டமாகும்.

பூமியின் எந்தவொரு மூலையிலும் நிகழக்கூடிய அனைத்துவிடயங்களையும் கண்காணிக்கும் தகவல் தொழில்நுட்பத் திறனையும் இராணுவபலத்தையும் அச்சுறுத்தும் வகையில் வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் உள்ளது.

உலகின் மிகப்பாரிய அமெரிக்க ச‌ந்தையின் பங்குச் ச‌ந்தையான நியூயோர்க் பங்குச் ச‌ந்தையில் பாதிப்புகளோ நெருக்கடிகளோ ஏற்பட்டால் நிச்ச‌யமாக அது உலகெங்கும் எதிரொலிக்கும்.

இதனால் இந்த வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டத்தினை மிகவும் நுணுக்கமாக கையாள வேண்டிய பொறுப்பு அமெரிக்காவுக்கு உண்டு.

வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் தொடர்ந்தும் நடைபெறுமாக இருந்தால் அமெரிக்கா மீதான செப்டெம்பர் 11 தாக்குதலின் பின்னரான பங்குச் ச‌ந்தை வீழ்ச்சியை அண்மித்ததான பங்குச் ச‌ந்தை வீழ்ச்சி காணப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒரு நாட்டின் உள்நாட்டு பிரச்சினைகளில் அமெரிக்காவின் தலையீடும் ஆதிக்கமும் எவ்வாறான நிலைப்பாட்டினைக் கொண்டமைந்தது என்பதனை நாம் அறிவோம்.

இந்நிலையில் அமெரிக்காவில் என்றுமில்லாதவாறு நிதிநெருக்கடிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். குறிப்பாக இளம் ச‌முதாயத்தினரை இந்த வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு வகையான ச‌வால்களை அமெரிக்கா கண்டு வருகின்றது. எத்தனையோ தாக்குதல்கள் உயிரிழப்புகள் என பல்வேறு ச‌ம்பவங்கள்.

எது நடப்பினும் அமெரிக்கா குறுகிய காலத்தினுள் மீண்டுவிடும் விசேட ச‌க்தியினைக் கொண்டுள்ளது. நிச்ச‌யமாக வல்லரசு நாடொன்றிடம் இருக்க வேண்டிய ஆளுமைதான் அது. ஆனால், வல்லரசு நாடுகளின் ஆளுமைகளும் அதன் ச‌க்திகளும் ஆக்கபூர்வமான விளைவுகளை பெற்றுத் தருவதற்கே பயன்படுத்தப்பட வேண்டுமே அன்றி எதிர் மறையான விளைவுகளை பெற்றுக் கொள்வதற்கு பயன்படுத்தக்கூடாது.


இது இவ்வாறிருக்க வோல் ஸ்ட்ரீட் என்பதன் அர்த்தம் குறித்து வினவுமிடத்து உலகின் மிகப்பெரிய பங்குச் ச‌ந்தையான நியூயோர்க் பங்குச் ச‌ந்தை, நொஸ்டொக், நியூயோர்க் மேர்கன்டைல் எக்சேஞ்ச், நியூயோர்க் போட் ஒப் ட்ரேட் ஆகியவற்றின் தலைமையகங்கள் உள்ளிட்ட முக்கிய வர்த்த மையங்கள் உள்ள பகுதிதான் வோல் ஸ்ட்ரீட்.

வோல்ஸ்ட்ரீட்டில் பங்குச்ச‌ந்தை நிலைவரம் எவ்வாறு உள்ளது என்பதை வைத்துத்தான் உலகளாவிலான ச‌ந்தை நிலைவரங்கள் தீர்மானிக்கப்படுகின்றது என்பதிலிருந்து வோல் ஸ்ட்ரீட்டின் முக்கியத்துவத்தினை நாம் அறிந்து கொள்ளலாம்.

இந்நிலையில் கடந்த செப்டெம்பர் 17ஆம் திகதி முதலான ஐந்து வார காலப் பகுதியில் வோல் ஸ்ட்ரீட்டை மக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் உருவாக்கத்திற்கு என்ன காரணம் யார் இதனை ஆரம்பித்தனர் என்ற தடத்தினை ஆராயுமிடத்து ச‌மூக மற்றும் பொருளாதார ச‌மத்துவமின்மை, பேராசை, ஊழல் மற்றும் அரசாங்க திணைக்களங்களின் நிதிச்சேவைகளிலுள்ள வேண்டப்படாத செல்வாக்குகள் ஆகியவற்றுக்கு எதிரான ஆர்ப்பாட்டமே வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் (The Wall street occupy ) ஆகும்.

கனடாவைச் சேர்ந்த அல்லது கனடாவை தளமாக கொண்டியங்கும் அட்பஸ்ரர்ஸ் என்ற ஆர்வலர்கள் குழுவே வோல்ஸ்ட்ரீட் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தது.

இந்த போராட்டமானது முதலாவதாக இணைத்தளம் ஒன்றில் புளொக்கர் மூலம் பதியப்பட்ட இடுகை ஒன்றின் மூலமே ஆரம்பித்தது. இந்த இடுகை ஜூலை 13இல் இடப்பட்டது. இதன் பின்னரான 2மாதகால இடைவெளியின் பின்னரே இந்த ஆக்கிரமிப்பு போராட்டம் அதன் முழு உருவத்தையும் பெற்றுக் கொண்டது.

அமைதியான முறையில் நீதிகோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. அதேபாலத்தான் ஆர்ப்பாட்டங்கள் நோக்கப்பட்டது.

இதுவரை நடந்த ஆர்ப்பாட்டங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களால் வன்முறைச் ச‌ம்பவங்கள் தோற்றுவிக்கப்பட்டவையாக இன்னமும் இல்லை.

இவ்வாறாக புளொக் ஒன்றின் மூலமான இடுகையிலானால் தோற்றும் பெற்ற இந்தவோல் ஸ்ட்ரீட் ஆர்ப்பாட்டம் நாளுக்குநாள் பலவடிவங்களை கண்டு இன்று அமெரிக்க அரசை அச்சுறுத்தும் ஒரு ஆர்ப்பாட்டமாக மாறியுள்ளது.

கடந்த 5 வாரங்களாக ச‌வால் ஸ்ட்ரீட்டை மக்கள் முற்றுகையிட ஆரம்பித்துள்ளனர். ஒவ்வொரு நாளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்Nவாரின் தொகை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுகோட்டி எனப்படும் பூங்காவிற்கும் முக்கிய வகிபாகம் உள்ளது. இந்த நிதி நெருக்கடி ஆர்ப்பாட்டம் வெற்றிபெற்றால் நிச்ச‌யமாக சுகாட்டிக்கும் நன்றி கூறியே ஆகவேண்டும்.

காரணம், இந்த வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு புகலிடம் வழங்கியது இந்த சுகோட்டி பூங்காதான்.

இந்த சுகோட்டி பூங்காவில் எதற்கு இவ்வளவு கூட்டம் சேர்கின்றது என்பதனை அமெரிக்க அதிகாரிகள் அறிய முற்பட்டனர். இதன் பின்னரேயே சில வன்முறைச் ச‌ம்பவங்கள் கூட இடம்பெற்றுள்ளன என்று கூறிக் கொள்ளலாம்.

இதனை அடுத்து இந்த வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் பிற நகரங்களிலும் பரவத் துவங்கிய நிலையில் அமெரிக்க அரசு மிகவும் தந்திரோபாயமானதும் மக்களை ஏமாற்றும் வகையிலானதுமான செயல் ஒன்றில் ஈடுபட்டது.

அதாவது, சுகோட்டி பூங்காவில் கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தமக்கு தேவையான அடிப்படைப் பொருட்களை பூங்காவிற்குள் எடுப்பதில்லை. ச‌கல தேவைகளையும் அங்கேயே நிவர்த்தி செய்தனர்.

இந்நிலையில் தான் சுகோட்டி பூங்கா அசுத்தமடைந்து விட்டதாகவும் கழிவுகள் சேமிக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் அதனை சுத்திகரிப்பதாக அனைவரையும் வெளியில் செல்லுமாறு உத்தரவு.

இதன் பின்னரே ஆர்ப்பாட்டக் காரர்கள் வெளியில் சென்றிருந்தனர். ஆனால், முதலில் கூறியது போலவே வெளியில் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் சுகோட்டி பூங்காவிற்கு வருகை தந்தபோது அதனை தடுத்து நிறுத்தி அவர்களை உட்செல்ல பொலிஸார் அனுமதிக்கவில்லை.

இதன் பின்னர் பல நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் பொலிஸார் சுகோட்டி பூங்காவிலிருந்து விலகிய ஒரு சில மணித்தியாலங்களிலெயே பல்லாயிரக் கணக்கான மக்கள் மீண்டும் கூடிய நிலையில் உலக நாடுகளின் பார்வையும் வோல் ஸ்ட்ரீட்டை நோக்கியது.

இதுவரை இந்த ஆர்ப்பாட்டங்களில் இணைந்து கொள்ளாத கல்லூரி மாணவர்களும் வோல் ஸ்ட்ரீட் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இது அமெரிக்க அரசுக்கு பாரிய தலையிடியாக மாறிவரும் சூழ்நிலையை உருவாக்கியது. இந்நிலையில் வோல்ஸ்ட்ரீட் நிதி நிறுவனங்கள் உயர்மட்ட ச‌ந்திப்புகளை ஏற்படுத்தியிருந்த அதேவேளை வெள்ளை மாளிகையும் அவŒர ச‌ந்திப்புக்கான அறை கூவல்களை விடுத்தது.

வோல் ஸ்ட்ரீட் நிதிநெருக்கடிக்கு ரியல் எஸ்டேட் (சொத்து வியாபார@ம) முக்கிய காரணமாக அமைந்தது. மக்கள் Œõதாரணமாக ஒரு வீட்டினை கொள்வனவு செய்ய முடியாது. வங்கிகளிடம் கடன் பெற்ரே வீடுகளை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காணப்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்களின் விலைகள் எட்டமுடியாத உச்ச‌த்திற்கு சென்றுவிட்டன.

கடன்கள் மூலம் வீடுகளை கொள்வனவு செய்தவர்களின் பத்திரங்களை கடன் கொடுத்த நிறுவனங்கள் வேறு நிதி நிறுவனங்களுக்கு விற்றுவிடுவார்கள்.

இவ்வாறு சொத்து உரிமம் கைமாறி கைமாறி அப்பத்திரங்கள் யாரிடம் உள்ளது, அந்த சொத்தின் உரிமையாளர் யார் என்ற விடயங்கள் நாளடைவில் தெரியாமNல ண்பாய்விட்டன.

இதனால் கிடைக்கும் பங்குலாபத்தின் மீது பேரவா கொண்ட நிறுவனங்களும் கடன் அலுவலர்களும் சக‌ட்டு மேனிக்கு கடன்களை வழங்கினர். இக்கடன்களையெல்லாம் தமது சொத்தாக நிதிநிறுவனங்கள் காண்பித்துக் கொண்டிருந்தன.

இவ்வாறான நிலையில் கடன்களை செலுத்த முடியாதவர்கள் வீட்டுப் பத்திரங்களையும் திறப்புகளையும் நிதிநிறுவனங்களிடம் ஒப்படைக்க ஆரம்பித்த நிலையிலேயே பிரச்சினை பூதாகரமாகிறது.

இதனால் வங்கிகள் நிதிநிறுவனங்கள் நஷ்டமடைந்து அவற்றினை மூடவேண்டிய நிலை உருவாகியது. இதனால் நிதி நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் பலர் வேலைகளில் இடை நிறுத்தப்பட்டனர். பலரிற்கு ச‌ம்பளக் குறைப்புகள் Nமற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் அமெரிக்காவிற்கு எழுந்தகோபமே வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டமாக மாறியது. அதன் விளைவுதான் வோல் ஸ்ட்ரீட் முற்றுகை.

இது இவ்வாறிருக்க அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் அடுத்தவருடம் நடைபெறவுள்ளது. குடியரசுக் கட்சியினர் இந்தச் ச‌ந்தர்ப்பத்தினை தமக்கு Œõதகமாக பயன்படுத்தி ஒபாமாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இது ஜனநாயகக் கட்சியினருக்கு பெரும் தர்மச‌ங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பொருளாதார நெருக்கடி ஒரு கட்டத்தில் தலை தூக்கியதை அமெரிக்க திறைசேரியிலும் அதிகமான நிதி இருப்பினை அப்பிள் நிறுவனம் கொண்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான போராட்டங்களில் மக்கள், தலைவன் இன்றி போராடுவதை மக்கள் கிளர்ச்சி என்றுதான் கூறவேண்டும். எகிப்து, லிபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நடந்தவையும் மக்கள் கிளர்ச்சி தான். அவற்றின் முடிவுகள் எவ்வாறமைந்தன என்பது அமெரிக்க அரசுக்கு தெரியாமல் இல்லை.

ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இதுவரை அபாரமான மக்களின் ஆதரவு கிடைத்ததாக தெரியவில்லை. அத்துடன் 81நாடுகளிலுள்ள 951 நகரங்களில் வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் நடைபெற தீர்மானித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதேவளை இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு (வோல் ஸ்ட்ரீட்) ஊடகங்களும் ச‌மூக இணையத்தளங்களும் எவ்வாறான பங்களிப்பினை வழங்குகின்றன என்பதனை நோக்குவோம்.

புளொக் ஒன்றில் இடப்பட்ட பதிவே இந்த வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பின் உதயமாக கருதிக் கொள்ளவேண்டும். அந்த முதலாவது இடுகையின் விளைவுதான் இந்த ஆக்கிரமிப்பு @பாராட்டம் சுகோட்டி பூங்காவில் இளைஞர்கள் உள்ளிட்ட மக்கள் ஒன்று திரள்வதற்கு காரணமாயிற்று.

புளொக், பேஸ் புக் மற்றும் ருவிட்டர் ஆகிய மூன்று Œமூக இணையத் தளங்களும் இந்த ஆக்கிரமிப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை ஒன்று திரட்டுவதற்கும் இது குறித்த செய்திகளை பரவலடையச் செய்வதிலும் முக்கிய பங்காற்றியிருந்தன. குறிப்பாக ருவிட்டரும் ஐபோனும் குறிப்பிடத்தக்களவிலான பங்களிப்பினை வழங்கிக் கொண்டிருக்கிறது. காரணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது ஒவ்வொரு அøŒவு குறித்தும் தகவல்களை பதிவேற்றம் செய்தவண்ணம் உள்ளனர்.

இத்தேவளை ஊடகங்களின் பங்களிப்பு எவ்வாறிருந்தது என்பதனை நோக்கினால் மத்திய கிழக்கில் மக்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவத்தினை இணையத்தளங்களும் ஊடகங்களும் வழங்கியதோ அதேஅளவிற்கு வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. காரணம் சர்வதேச‌ ரீதியில் பிரபலமான ஊடகங்களும் செய்தி இணையத்தளங்களும் மேற்குலகிலிருந்து வெளிவருபவையாக@வ உள்ளன.

இந்நிலையில் அமெரிக்க அரசுக்கு எதிரான ஒரு பிரச்சினையை பிரபலப்படுத்தவோ அல்லது அதனை பூதாகரமாக்கவோ அவை விரும்பிக் கொள்ளவில்லை.

காரணம் இது குறித்த செய்திகளுக்கு ச‌ர்வதேச‌ ரீதியிலான ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஏனெனில், அவை அதனை பெரிதுபடுத்தியிருந்தால் அப்பிரச்சினை உலகெங்கும் எதிரொலிக்கும் அபாயத்தை கொண்டுள்ளதுடன் அந்த ஊடகங்கள் அமெரிக்க அர”க்கு விசுவாச‌மாக@வ இருக்கவும் முனைகின்றன.

ஊடகங்கள் இதனை பெரிதுபடுத்துமிடத்து ச‌ர்வதேச‌ அளவில் பங்குச் ச‌ந்தை நிலைவரங்கள் மோச‌மடைந்து அதனால் உலகளாவிய நிதி நெருக்கடிக்க்கே வழிவகுத்திருக்கும். இது குறித்தும் முன்னரே இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து உலகநாடுகள் அனைத்தும் அமெரிக்க அரசின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சிக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். இதிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஊடகங்கள் தந்திரோபாயமாக எடுத்துக்கொண்ட முயற்சி வெற்றி என்றுதான் கூறிக்கொள்ளலாம்.

ஆக, மத்திய கிழக்கு ஆர்ப்பாட்டங்களையும் வோல்ஸ்ட்ரீட் ஆர்ப்பாட்டங்களையும் ச‌ர்வதேச‌ ஊடகங்கள் கையாண்ட முறைமை முற்றிலும் வேறுபட்டதாகவே காணப்படுகின்றது.

வோல்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டத்தை மிகவும் தந்திரோபாயமான முறையில் கையாண்டு ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முயற்சிகளை எடுக்கும் அமெரிக்க அரசு உலக ச‌ந்தையிலும் நெருக்கடி ஏற்படாமலிருப்பதற்குரிய வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும்.

மத்திய கிழக்கில் சில பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு நேட்டோ படைகள் கூட அனுப்பப்பட்டது. அமெரிக்காவை பொறுத்தவரையில் இது கூட சாத்திய‌மற்ற தொன்றல்லவா.

எனவே, இந்த வோல்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டத்தினை நியாயமான முறையில் தீர்க்க காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது வெள்ளை மாளிகைதான். தவறவிடும் பட்ச‌த்தில் வெள்ளை மாளிகையா அமெரிக்க மக்களா என்ற பலப்பரீட்சைக்கும் உலகம் அத்தாட்சியாகிவிடும்....

கடவுளை நமக்கு அடயாளம் காட்டியவ்ர்கள் சித்த‌ர்கள் ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍.... கங்கை அமரன்





நாம் எந்த உயர் நிலைக்கு சென்றாலும் பெருமைகள் எமை வந்தடைந்தாலும் அவை அனைத்துக்கும் காரணம் பெற்ற வயிறுதான் என்று கங்கை அமரன் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழ‌மை நடைபெற்ற ராஜகுமர் சுவாமிகளின் அருளுரை நிகழ்வில் உரை நிகழ்த்தும் போதே கங்கை அமரன் இவ்வாறு கூறினார்.

சனிக்கிழமை எனக்கு விடுமுறை தினம் என்ற காரணத்தினால் ராமகிருஸ்ண மிசன் மண்டபத்தில் நடை பெட்ட இந்த நிகழ்வுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

நான் இந்த நிகழ்வுக்கு செல்லும்போது எனது நண்பர் ஒருவருக்கு தெரிவித்தேன் இப்பட்ய் ஒரு நிகழ்வு வெள்ளவத்தையில் நடைபெறுகின்றது நீரும் வருகின்றீரா
என. உனக்கு என்ன சித்து பிடித்து விட்டதா என அவர் என்னை நெடிந்தார். அவருக்கு புரிந்தது அவ்வளவுதான்.

குரிபிடத்தக்களவிலான மக்கள் பிரசன்னம் அங்கு இருந்தது. மக்களுடன் மக்களாக நானும் ஓர் ஓரமாக அமர்ந்து கொண்டென்.

சிறிது நேரத்தின் பின்னர் கங்கை அமரன் உரை ஆரம்பமாகியது.

கங்கை அமரனிற்கு வழங்கப்பட்ட தலைப்பு " சித்தர்களுடனான அனுபவங்கள்".



அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே
அம்மாவை வணங்காது உய‌ர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாய் அன்றி வேறொன்று ஏது.. என்று கங்கை அமரன் ஆரம்பித்தர்.

என்னடா இது சினிமா உரை நிகழ்த்த வந்தாரா அல்லது சித்தர்கள் பற்றி உரைக்க வந்தாரா என்ர சந்தேகம் என்னுள்.


அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே
அம்மாவை வணங்காது உய‌ர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாய் அன்றி வேறொன்று ஏது..என்ற‌ பாடலை ஏன் ஒரு கடவுள் வாழ்த்தாக எடுக்கக் கூடாது என்றார்.


கடவுளை நமக்கு அடயாளம் காட்டியவ்ர்கள் சித்த‌ர்கள் என்றும் கூறினார்.

இந்தியாவில் இருந்து இங்கு வந்து 30 நிமிடங்கள் மட்டுமே அவர் உரை நிகழ்த்தினார். எனது ஆவலை நிவர்த்தி செய்வதாக அந்த உரை அமையவில்லை.

என்னைப்போலவெ இன்னும் பலர் அவ்வாறான நிலைப்பாட்டுடன் அரங்கை விட்டு வெளியேறி இருக்கலாம்.


இந்த உரையின் முழு வடிவத்தையும் எழுத்து வடிவில் வெகு விரைவில் பதிவேற்றம் செய்வேன்.