ஜனநாயக ஆட்சிக்காக ஒன்றிணையுங்கள்

நல்லிணக்கத்துக்கான சூழல் அமைவதற்கு மனிதாபிமான பணிகள் மூலமான அபிவிருத்திகள் ஆதரவாக அமையும்

சர்வதேச செஞ்சிலுவை சங்கங்கள் மற்றும் செம்பிறைச் சங்கங்களின் செயலாளர் நாயகம் எல்ஹாட்ஜ் அஸ் சி 






யோ. நிமல்ராஜ்

நல்லிணக்கத்துக்கான சூழல் அமைவதற்கு மனிதாபிமான பணிகள் மூலமான அபிவிருத்திகள் ஆதரவாக அமையும். அதேவேளை மக்கள் மத்தியில் நல்லிணக்கச் செயற்பாடுகள் மூலம் சமாதானம் ஸ்திரத்தன்மை என்பவை கட்டியெழுப்பப்படவேண்டுமென கூறியுள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கங்கள் மற்றும் செம்பிறைச் சங்கங்களின் செயலாளர் நாயகம் எல்ஹாட்ஜ் அஸ் சி இலங்கையில் இடம்பெற்றுள்ள அபிவிருத்திகள் தொடர்பாக தெளிவான நோக்கு இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையர்களின் கண்களினூடாக பார்க்கும் போது அபிவிருத்தி திட்டங்கள் மாற்றங்கள் சிறந்ததாக அமைந்திருக்கலாம் ஆனால் புதிய விருந்தினர் ஒருவர் இவை தொடர்பான தெளிவான நோக்கினை கொண்டிருக்க முடியாதெனவும் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ்வாதாரங்களையும் வாழ்விடங்களையும் மீளக்கட்டியெழுப்புவதில் இன்னமும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

தினக்குரலுக்கு வழங்கிய விசேட நேர்காணல் ஒன்றில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த எல்ஹாட்ஜ் அஸ் சி இவ்வாறு குறிப்பிட்டார்.

அவரது நேர்காணல் கேள்வி பதில் வடிவில்;

கேள்வி: போருக்கு பின்னர் இலங்கையில் இடம்பெறும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகள், ஏனைய மாற்றங்களை அரச சார்பற்ற நிறுவனம் என்ற ரீதியில் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில்: இலங்கையர்களின் கண்களூடாக பார்க்கும்போது தம்மளவில் அபிவிருத்தி திட்டங்கள் ஏனைய மாற்றங்கள் நன்றாகவே இருக்கலாம். சகல காலப்பகுதிகளிலும் இவ்வாறான நிலையையே அவர்கள் கொண்டிருந்திருப்பார்கள்.

ஆனால் இலங்கையில் ஒரு புதிய விருந்தினர் அபிவிருத்தி நடைபெறும் பகுதிகளூடாக செல்லும் நிலையில் அபிவிருத்தி தொடர்பான பரந்த நோக்கினை கொண்டிருக்க முடியாது. என்பதே எனது நிலைப்பாடாகும்.

எம்முடன் இணைந்து பணியாற்றியவர்கள், எனது இலங்கை விஜயத்தில் நான் சந்தித்த மக்கள் ஆகியவர்களுடனான சந்திப்பின் அடிப்படையில் அவர்கள் இன்னமும் சிறந்த எதிர்காலம் தொடர்பான நம்பிக்கைகளையும் வாய்ப்புக்களையும் எதிர்நோக்கிய வண்ணம் உள்ளனர் என்றே கூறமுடியும்.

அதேவேளை பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ்வாதாரத்தையும் வசிப்பிடங்களையும் மீள உருவாக்குவதில் இன்னமும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்பவர்களாகவே உள்ளனர்.

நாட்டில் தற்பொழுது காணப்படும் நிலைமைகள் தொடர்பாக நாம் கவனத்தில் கொண்டுள்ளதுடன் குறித்த சில விடயங்கள் தொடர்பாக பல்வேறு திட்டங்களூடாக இணைந்து செயற்படுவதற்கும் திட்டமிட்டுள்ளோம்.

குறிப்பாக மக்களின் வாழ்வாதாரம், வசிப்பிடம் ஆகியவற்றை கட்டி எழுப்புவது தொடர்பில் அவர்களுக்கு தேவையான உதவித் திட்டங்களை முன்னெடுத்து இணைந்து செயற்பட நாம் தயாராகவே உள்ளோம். இந்த விடயங்கள் தொடர்பான புதிய திட்டங்கள் செயற்படுத்தப்படும்.

கேள்வி: இலங்கை விஜயத்தின் ஓர் அங்கமாக நீங்கள் வடபகுதிக்கான விஜயமொன்றையும் மேற்கொண்டுள்ளீர்கள். வடபகுதி மக்களுக்கான வீட்டுத்திட்டம் ஒன்றையும் ஆரம்பித்து வைத்துள்ளீர்கள். ஆனால் நாட்டில் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பாக சர்வதேச அரசசார்பற்ற நிறுவனம் என்ற ரீதியில் தங்களின் நோக்கு எவ்வாறு உள்ளது?

பதில்: நல்லிணக்கச் செயற்பாடுகள் என்பவை பூரணமான அரசியல் சார் பரிமாணங்களை கொண்ட விடயமாகும். செஞ்சிலுவை சங்கங்கள் எந்தவிதமான பக்கச்சார்பும் பாராபட்சமும் இன்றி உலகளவில் செயற்பட்டு வருகின்ற ஓர் அமைப்பாகும். இவ்வறான நிலையில்  அதன் நிகழ்ச்சி நிரல் தொடர்பாக அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

எமது நிகழ்ச்சித திட்டமானது முழுக்க முழுக்க மனிதாபிமான நிகழ்ச்சித் திட்டத்தினை கொண்டதாகும். நாம் அதனையே மேற்கொண்டு வருகின்றோம்.
அத்துடன் இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் மக்களையும் இணைத்து செயற்படுகின்றோம். மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக மட்டும் இவ்வாறு ஒன்றிணைத்து செயற்படவில்லை.

இந்த தேவைகள் அவர்களின் விருப்பங்களை நிறைவுசெய்வதற்காக மட்டுமோ அல்லது அவர்களுக்கு தேவையான பொருட்களைப் பெற்றுக்கொள்வதாக மட்டுமோ அமைந்துவிடவில்லை.

அதேநேரம் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு மக்கள் தாமாகவே தீர்வுகாணவேண்டும். நல்லிணக்கச் செயற்பாடுகளூடாக மக்களின் தேவைகள் பாரபட்சமின்றி தீர்த்து வைக்கப்பட வேண்டும்.

எந்தவிதமான பக்கச்சார்பின்மையும் பாரபட்சமுமின்றி மனிதநேய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

கேள்வி: இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளில் சர்வதேச செஞ்சிலுவை சங்கங்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்துள்ளன? நல்லிணக்க செயற்பாடுகள் அரசியல் சார்ந்ததாக இருக்கும் நிலையில் தன்னார்வ தொண்டு நிறுவனமாக உள்ள தங்களின் அமைப்பு நல்லிணக்கச் செற்பாடுகளுக்கு எவ்வாறு உதவமுடியும்?

பதில்: நான் கூறியதுபோல, எமது நிகழ்ச்சிநிரலானது நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பங்களிப்பு செய்வதென்ற இலக்குடனேயே காணப்படுகின்றது.
ஏனென்றால் தாம் அனைவரும் சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மை உருவாக வேண்டுமென விரும்புகிறோம்.

நான் கூறியதுபோல மனிதாபிமான பணிகளும் நல்லிணக்கத்திற்கு முக்கிய ஆதாரங்களாகும். ஏனென்றால் நாம் அனைவரும் சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மையினையே விரும்புகின்றோம்.
அரசியல் நடவடிக்கைகளில் நாம் அனைவரும் ஈடுபட்டிருக்கவில்லை.

ஆனால் அனைவரும் மகிழ்ச்சி சமாதானம், அமைதியினையைே விரும்புகின்றோம். நல்லிணக்க செயற்பாடுகள் அரசியல் சார்ந்தவையாக உள்ளன. ஆயினும் அது மனிதாபிமானப் பணிகளை நாம் முன்னெடுப்பதன் மூலம் நல்லிணக்கத்திற்கு ஆதரவாக செயற்பட முடியும்.

மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான நம்பிக்கையினை எம்மால் வழங்கமுடியும். நல்லிணக்கம் உருவாவதற்கான சிறந்த சூழ்நிலைகளையும் நம்பிக்கையையும் எம்மால் வழங்க முடியும். இதன்மூலம் அதற்குரிய பெறுமானங்கள் மேலும் வலுவடையும்.

கேள்வி: கடந்த காலங்களில் அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கையில் தமது பணிகளை தொடர பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்தன. குறிப்பாக யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் சவால்கள் எதிர்கொள்ளப்பட்டிருந்தன. இவ்வாறான நிலையில் அரசாங்க தொண்டு நிறுவனங்களுக்கு எவ்வாறு ஆதரவளிக்க முடியும்?

பதில்: செஞ்சிலுவைச் சங்கம் அல்லது செம்பிறைச் சங்கம் ஆகியவை ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களிலிருந்து வேறுபட்டவையாகும். எமது நிறுவனம் இன்று நேற்று தோன்றியதல்ல. பல ஆண்டுகள் பழமையாதனது அத்துடன் அனர்த்தங்கள், மோதல்கள் இடம்பெற்ற சகல பகுதிகளிலும் எமது உதவிப்பணிகள் தொடர்ந்துள்ளன.

மக்களையும் எம்முடன் இணைந்து இவ்வறான பணிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். பொது அதிகார சபைகளின் உதவியுடன் எம்மால் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மனிதாபிமான உதவிப்பணிகள் தொடர்பாக உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் ஆதரவு சிறப்பாகவே காணப்படுகின்றது.

இலங்கையில் கடற்கோள் இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்ட சகல சந்தர்ப்பங்களிலும் நாம் செயற்பட்டுள்ளோம். மாறாக வந்து சென்று கொண்டிருக்கவில்லை. இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் இலங்கைக்குச் சொந்தமானது. எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளியேற முடியாது. தொடர்ந்தும் எமது பணிகள் இங்கு தொடரும் இந்த நிலைமை தக்ககாலத்தில் கொள்ளப்படும். அதற்காக சில கொள்கைகளில் இணக்கம் கட்டுப்பாடுகள் காணப்பட வேண்டும். அத்துடன் செஞ்சிலுவை சங்கங்கள் மிகவும் தெளிவான நிலையில் உள்ளன. மனிதாபிமான உதவிப் பணிகளை தொடர்வதே எமது தாய் கொள்கையாகும். அதில் கவனம் செலுத்துவோம்.

இதற்கு பாரபட்சமற்ற பக்கச்சார்பில்லாத செயற்பாடுகள் அவசியமானதாகும். அதேவேளை எமது அமைப்பு சுயாதீனத்துடன் செயற்பட்டு வருகின்றது.

ஒரு சந்தர்ப்பத்தில் குறைவான தரத்திலும் இன்னொரு சந்தர்ப்பத்தில் உயர்தரத்திலும் சேவைகளை வழங்கமுடியாது. சிறந்த சேவை காரணமாகவே நீடிக்க முடியும். இலங்கையில் பல்வேறு அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்தன. இதன்போதும் மக்களை இணைக்க எமது பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இங்கு இடம்பெற்ற மோதல்களின் போதான இழப்புக்கள் தொடர்பாக மக்கள் எம்மிடம் கூறியுள்ளனர். அன்றைய காலப்பகுதிமுதல் பல நிறுவனங்கள் அரசசார்பற்ற நிறுவனங்கள் தமது பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

ஆனால், கடற்கோள் ஏற்பட்ட காலப்பகுதி முன்னரான காலப்பகுதிமுதல் எமது செயற்பாடுகள் இங்கு காணப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் செஞ்சிலுவைச் சங்கம் மட்டுமே தமது பணியை மேற்கொண்டிருந்தது.

மக்கள் சுனாமியால் உயிரிழப்பு, பொருட்சேதம், மனநோய் போன்றவற்றை சந்தித்திருக்கிந்தனர். எமது பணிகள் மூலம் மக்களின் சிறந்த எதிர்காலம் கட்டி எழுப்பப்பட்டது.

சகல சந்தர்ப்பங்களிலும் மனிதாபிமான பணிகளை முன்னெடுப்பதே எமது இலக்காக இருந்தது.

கேள்வி: மோதல்கள் நிறைவடைந்திருக்கும் நிலையும் வடக்கில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயங்களில் பொதுமக்களின் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாத நிலையில் உள்ளன. இதற்காக மக்கள் போராட்டங்களை நடத்தியும் அரசாங்கம் அந்த காணிகளை விடுக்கவில்லை. இது குறித்து தங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்: மக்கள் தமது உரிமைகளுக்காக, குடியுரிமைக்காக போராடுகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக அரசாங்கம், அது மக்களின் பிரச்சினை எனக்கூறுகின்றது.

அதேவேளை இந்த விவகாரமானது செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதான பணி எல்லைக்கு உட்பட்ட விடயமல்ல. மக்களுக்கு எவ்வாறு உதவ முடியும் அவர்களின் வாழ்வாதாரத்தை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும் என்பதே எமது இலக்காக உள்ளது. மக்களின் மீள்குடியேறறம் மிகவும் அசியமானது. நாம் அதற்காக எமது உதவிப்பணிகளை முன்னெடத்து வருகின்றோம். அதேவேளை வாழ்வாதாரத்தை கட்டி எழுப்புவதும் எமது பிரதான இலக்காகும். அந்த அடிப்படையில் எம்மால் உதவிகளை வழங்கமுடியும்.

உலகின் சகல பகுதிகளிலும் மக்கள் தமது உரிமைகளுக்காக போராடியே வருகின்றனர்.

கேள்வி: இலங்கை ஜனாதிபதியை சந்திக்கவுள்ளீர்கள். இச்சந்திப்பின் போது, உயர்பாதுகாப்பு வலயங்களில் விடுவிக்கப்படாத மக்களின் காணிகள் தொடர்பராக உங்களால் கூறமுடியுமா?

பதில்: முதலில் அவரை சந்திப்போம்.

கேள்வி: எதிர்காலத்தில் இலங்கையில் எவ்வாறான உதவிப் பணிகளை முன்னெடுக்கவுள்ளீர்கள்?

பதில்: நாம் அங்கு சகல கஸ்டப் பகுதிகளிலும் உதவிகளை வழங்கிவருகிறோம். மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டி எழுப்புவதே எமது நோக்கம். சில சந்தர்ப்பங்களில் அவர்கள் தாமாகவே பிரச்சினைகளை எதிர்கொள்ளநேரிடும்.

மனிதாபிமானத்தை பாதுகாக்கும் அதேவேளை வேறு
விடயங்களிலும் நாம் கவனம் செலுத்தி வருகிறோம்.

மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருவதுடன் விதிவிபத்துக்கள், கடலில் இழுத்துச் செல்லப்படுதல் போன்ற சம்பவங்களில் உயிரிழப்புக்கள் தவிர்க்கப்படுவதனையும் நாம் எமது விழிப்புணர்வுத் திட்டங்கள் மூலம் தடுத்து வரும் அதேவேளை மீட்பு பணிகளும் தொடர்கின்றன.

இவ்வறாக தேவைப்படும் சகல சந்தர்ப்பங்களிலும் எமது பணிகள் தொடரும்.

கேள்வி: உலகளவில் பல்வேறு நாடுகளில் தங்கள் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. எந்த நாடுகளில் கடுமையான சவால்கள் எதிர்கொள்ளப்படுகின்றது?

பதில்: மத்தியகிழக்கு நாடுகளில் உதவிப் பணிகளை மேற்கொள்வதில் பாரி சவால்களை எதிர்கொள்கின்றோம். குறிப்பாக சிரியாவில் மிகமோசமான நிலை காணப்படுகின்றது.

அங்கு இதுவரை 6 மில்லியன் பேர் உள்ளக இடம்பெர்வுகளை எதி்கொண்டுள்ளனர். 4 மில்லியன் பேர் வேறுநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

சில முற்றுகையிடப்பட்ட பகுதிகளில் உதவிப்பணிகளை முன்னெடுக்க முடியாத நிலையே காணப்படுகின்றது. அந்த இடங்களில் விமானம் மூலம் உதவிப் பொருள் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது. இது சரிரயான வழிமுறை அல்ல.

சிரியாவில் மிகமோசனமா அவலநிலை தொடர்கின்றது. இங்கு மிகவும் கொடூரமான  நிலையையே காணமுடியும்.

அதேவேளை மத்திய ஆபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலும் மிகமோசமான நிலை காணப்படுகின்றது.

கேள்வி: இலங்கையில் உதவிப்பணிகளை மேற்கொள்ள அரசாங்கம் தடையாக உள்ளதா? அரசின் ஆதரவு எவ்வாறு உள்ளது?

பதில்: இல்லை, இங்கு எமது உதவிப்பணிகளை முன்னெடுப்பதற்கு போதுமான முன்னெடுப்பதற்கு போதுமான இடமளிக்கப்பட்டுள்ளது. இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் ஆகிய முறையில் இங்கு செயற்பட்டு வருகின்றது.

எமது தேசிய சமூகத்துக்கு நம்பகத்தன்மையுடன் நாம் செயற்பட்டு வருகின்றோம். மக்களுக்கான உதவிகளை வழங்கதயாரகவே உள்ளோம். சிறந்த எதிர்காலத்தை அவர்களுக்கு அமைத்துக்கொடுப்பதே எமது நோக்கமாகும்.

இங்கு எமது பணிகளுக்கு அரசாங்கம் தடையாக இல்லை. நாம் எமது சேவைகளை வழமை போலவே தொட்ந்து வருகின்றோம். எம்மால் எவ்வாறான சேவைகள் தொடர்கின்றன. போருக்கு பின்னர் மக்களுக்கு தேவையான வீடுகளை நிர்மானித்து வழங்கியுள்ளோம். எமது செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்கம் திருப்தியுடன் உள்ளது.

கேள்வி: அரசார்பற்ற நிறுவனங்கள் போரினால் பாதிக்கப்பட மக்களை இலக்காக கொண்டு செயற்படுவதாக கூறப்படுகின்றது. இவ்வறான நிலையில் மலையகம் உள்ளிட்ட ஏனைய பகுதி மக்களையும் உள்ளடக்கிய புதிய உதவித் திட்டங்கள் தங்களால் முன்னனெடுக்கப்படுமா?

பதில்: முன்னர் கூறியதுபோல மக்களின் தேவைகளையே நாம் நிவர்த்தி செய்கின்றோம். போர் நடைபெற்ற காலப்பகுதியில் மக்களுக்கு உதவ வேண்டிய தேவை இருந்தது. அதேவேளை அனர்த்தங்கள் இடம்பெற்றபோதும் நாம் உதவிப் பணிகளை முன்னெடுத்தோம். எமது வளத்துக்கு உட்பட வகையில் சகல மக்களுக்குமான உதவிகள் தொடரும்.