ஜனநாயக ஆட்சிக்காக ஒன்றிணையுங்கள்

இசைஞானி இளையராஜாவுக்கு சங்கீத நாடக அக்கடமி விருது

சைஞானி இளையராஜாவுக்கு
சங்கீத நாடக அக்கடமி விருது 
இசைஞானி இளையராஜாவுக்கு 
சங்கீத நாடக அக்கடமி விருது 

திரைப்பட இசையமைப்பாளர் ஒருவருக்கு கௌரவ அடிப்படையில் சங்கீத நாடக அக்கடமி விருது வழங்குவது அடிக்கடி நடைபெறும் ஒரு விடயமல்ல. ஆனால், இசைஞானி இளையராஜாவின் தமிழ் சினிமா பிரவேசத்தின் பின்னர் தமிழ் திரை இசையின் பரிணாம வளர்ச்சியை பிரதிபலிக்கும் இன்னொரு வாய்ப்பாக அவரது ஆக்கத்திறன் மற்றும் பரிசோதனை இசை படைப்புக்களை கௌரவிக்கும் முகமாக இந்த ஆண்டுக்கான சங்கீத நாடக அக்கடமி விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

1960 இல் தமிழ் திரை இசை ஏற்கனவே அதன் உச்சத்தை தொட்டிருந்தது. எம். எஸ். விஸ்வநாதன் சாத்தியமான ஒவ்வொரு இசை உணர்வினையும் பரிசோதனைக்கு உட்படுத்தி இதனை விட வேறு ஏதாவது கிடைக்குமா என ரசிகர்களை அதிசயிக்க வைத்தார். 
இந்நிலையில், திரை ரசிகர்களின் உதடுகளில் ஹிந்திப் பாடல்களே உச்சரிக்கப்பட்டது. 

ஆனால், ஹிந்தி இசைக்குள் மூழ்கியிருந்த தமிழ் சினிமா ரசிகர்களை மீண்டும் தமிழ் திரையிசையின் பால் ஈர்க்க வைத்த பெருமை இசையமைப்பாளர் இளையராஜாவையே சார்ந்ததென பாடகர் ரி. எல். மஹாராஜன் கூறியுள்ளார். 

1976 இல் களத்தில் புதிய வருகையாக அன்னக்கிளி மூலம் உட்புகுந்து அனைத்து வகைகளிலும் திரையிசைப் பாடல்களை உருவாக்கியிருந்தார். முதலாவது பாடல் நாட்டுப்புறப் பாடலை தழுவியிருந்தாலும் “சொந்தமில்லை பந்தமில்லை” என்ற பாடல் நடனமக்ரியா என்ற ராகத்தில் அமைந்திருந்தது. 

இதேவேளை, புதிய வடிவங்களிலும் நவீன இசையிலும் பாடல்களை உருவாக்குவதற்கு சாட்சியாகவும் சொந்த நாட்டின் இசைக்கும் நவீன ரிதங்களுக்கும் சமநிலையைப் பேணும் முகமாகவும் நாட்டுப் புறப் பாடல் தொனியையும் நவீன இசைகளையும் களைந்து ஒரு தொகை வயலின் இசையை உட்புகுத்தி செந்தூரப் பூவே என்ற பாடலை உருவாக்கியிருந்தார். 

அதேவேளை, கர்நாடக சந்கீதத்தையும் நாட்டுப் புறப் பாடல் மொட்டுக்களையும் கலந்து மருத மரிக்கொழுந்து வாசம் மாய மாயாமாளவ கொளளை” இராகத்தில் உருவாகி அநேகரின் மனங்களையும் வென்றிருந்தார். 

அதேபோல், சின்ன கண்ணன் அழைக்கிறான், இந்தப் பாடல் எம். பாலமுரளி கிருஷ்ணாவின் சுப்பர் ஹிட் பாடலாகும். கண்ணன் ஒரு கைக்குழந்தை; கேதாரம் ராகத்தில் அமைந்த சுந்தரி நீயும் , இது ஒரு பொன்மாலைப் பொழுது போன்றவையும் ஒரே ராகமாக இருந்தாலும், முற்றிலும் வேறுபட்ட பாணியில் அமைந்த ஜனனி மற்றும் நதியிலாடும் பூவனம் ஆகியவை. இந்த இரு பாடல்களும் கல்யாணி ராகத்தில் அமைந்திருந்தன. 

அத்துடன், சின்மேந்திர மத்திமத்தில் மிகவும் அழகாக ஆனந்த ராகம் கேட்கும் மற்றும் தாலாட்டுப் பூங்காற்று அத்துடன், பனி விழும் மலர் வனம் ஆகியவை தமிழ் திரை இசையிலும் புதிய பரிணாமத்துடன் வெளிவந்த பாடல்கள் . 

அத்துடன் தமிழ் திரையிசைக்கு அப்பால் இசைத் தொகுப்புகளாக வெளிவந்த திருவாசகம் ஸ்வரங்களின் ஐக்கியம் (Thiruwasakam Symphony) ஹெள ரு நேம் இற் (How to name It) மற்றும் நத்திங் பட் வின்ட் (Nothing but wind) ஆகியவை இளையராஜா புதிய சிந்தனைகளுடன் ஒவ்வொரு தடவையும் புதிய வெளியீடுகளை உருவாக்குகின்றார் என்பதற்கு சான்றாக அமைந்தது. 

இத்தனை பெருமைகளையும் திறமைகளையும் உடைய அவர் சங்கீத அக்கடமி விருது தனக்கு அறிவிக்கப்பட்டமை அதிர்ச்சி தருகின்றதெனக் கூறியுள்ளார்.

Like