ஜனநாயக ஆட்சிக்காக ஒன்றிணையுங்கள்

யாழ்ப்பாண இசைவிழா காயங்களுக்கான களிம்பா களியாட்டமா?

சஞ்சலங்கள் நிறைந்து காணப்படும் மனங்களுக்கு நிம்மதி தரும் விடயங்களில் ஒன்றாக காணப்படும் ஓர் அற்புதமான ஆயுதமாக இசையும் அதனோடிணைந்த கலைகளும் விளங்குகின்றதனை நாம் அறிந்திருக்கின்றோம்.
இந்த அர்த்த புஷ்டியை தொனிப்பொருளாகக் கொண்டு மூன்று தசாப்தங்களாக மோதல்களினால் பாதிக்கப்பட்டு ஷெல் தாக்குதல்கள், பல் குழல் குண்டுகள், விமானத் தாக்குதல்கள் உள்ளிட்டவற்றை மறக்க முற்பட்டுக் கொண்டிருக்கும் வடபகுதியை இலக்காக கொண்டு அந்த போரின் வடுக்களுக்கு களிம்பு பூ”ம் ஒரு சிறு முயற்சியாகவே யாழ் இசை விழா நடத்தப்படுவதாக அதன் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், குண்டுச் சத்தங்கள் அங்கு ஓய்ந்து காணப்படுகின்றனவ தவிர போர் உபகரணங்களும் அதன் இயக்குநர்களும் இன்னமும் அப்படியே. இவ்வாறான ‹ழ்நிலைகளில் தான் வடபகுதியின் இதயமான யாழ்.குடா நாட்டினை இலக்குவைத்து தென்னிலங்கையில் வேரூன்றியிருக்கும் அமைப்புகளும் அரச நிறுவனங்களும் பல்வேறு மனமகிழ் நிகழ்வுகளை அங்கு நடத்துகின்றன.
இந்நிகழ்வுகளுக்கு நிதி அனுசரணை வழங்குவதற்காக வழமை போலவே தமக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியினை எங்காவது செலவிட வேண்டுமெனக் காத்திருக்கும் வெளிநாட்டு தூதரகங்களும் அதனோடிணைந்த அரசசார்பற்ற நிறுவனங்களும் உள்ளன.இந்த நிறுவனங்கள் இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் நிறுவனங்களிடம் நிதியினை வழங்கி தமது செயற்றிட்டங்களை அமுல்படுத்துகின்றன.
ஆனால், இவ்வாறான நடவடிக்கைகளின் பெறுபேறுகள் வெறுமனே இரசனை, களியாட்டம் என்ற இரு வட்டங்களுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டு விடாமல் அர்த்தம் நிறைந்த பெறுபேறுகளைக் கொண்டிருக்க வேண்டும்.
வன்னி, மோதலின் உக்கிர நிலையில் (கஞுச்டு ணிஞூ tடஞு தீச்ணூ) வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத துயரங்களையும் சொத்து இழப்புகளையும் கண்ணுற்ற தமிழ் மாவட்டமாகும்.
இப்பகுதிமக்களின் மீள்குடியேற்றம் இன்று எவ்வாறான நிலையில் உள்ளது. அம்மக்கள் சொந்த நிலங்களில் பூரண மீள்குடியேற்றத்தினை நிறைவு செய்துவிட்டார்களா என்பது?
இவ்வாறான நிலையில் காணப்படும் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யாத நிலையில் அம்மக்கள் எவ்வகையில் இசையினை லயிக்கத் தயாராவார்கள்.
யாழ்.குடாநாடு இறுதிக்கட்ட மோதல்களில் இழப்புக்களை சந்தித்திருக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், அம்மக்கள் தமக்கு நேர்ந்தவைகளையும் தமது உறவுகளின் அவலங்களையும் மறந்துவிடவில்லை. ஒருவழியாக விடுதலைப் புலிகள் சிவில் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள். இதன் பின்னரான நல்லிணக்க செயற்பாடுகளின் அங்கங்களாகவே இதுபோன்ற களியட்ட நிகழ்வுகள் நடத்தப்படுகின்றமை வரவேற்கத்தக்க ஒன்றுதான்.
மக்கள் அமைதியான வாழ்வினை தொடர்வதற்கு இவை ஆதாரமாகின்றன என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. இதுக்கு முன்னரான காலப்பகுதியில் களியாட்ட நிகழ்வுகள் தென்னிலங்கையின் கரையோர நகரங்களை மையப்படுத்தி இடம்பெற்று வந்தன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை கட்டணம் அறவிடப்படும் நிகழ்வுகளாகவே நடைபெறுவது வழமை.
காரணம் அங்கு ”ற்றுலாத்துறை அபிவிருத்தி வெளிநாட்டு பயணிகளின் வருகை என்பவற்றை இலக்காகக் கொண்டிருக்கிறது. ஆனால், வடபகுதிகளில் அதுபோன்ற ஒரு நிகழ்வினை கட்டண அறவீட்டுடன் நடத்த முடியாது ஏனெனில், இம்மக்களின் வாழ்க்கை முறை தென்பகுதியுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் வேறுபட்டதாகக் காணப்படுகின்றது.
சந்தையில் மரக்கறி அல்லது மீன்வியாபாரிகளுடன் விலை குறைப்பதற்கும் அல்லது மீதக்கா”க்கும் சண்டை பிடிக்கும் மனநிலையுடையவர்களே வடபகுதி மக்கள் ஒரு சிறு செலவீனத்தை மேற்கொள்வதற்கு முன்னர் பல தடவைகள் சிந்திப்பவர்கள் அம்மக்கள்.
இதனால் இதுபோன்ற களியாட்ட நிகழ்வுகளுக்கு பெருந்தொகையான பணத்தினை செலவிடுவதற்கு அம்மக்கள் தயாராக இல்லை. இதுபோன்ற புறச்‹ழலுக்கு மத்தியிலேயே கட்டணமற்ற சிலகளியாட்ட நிகழ்வுகள் அங்கு இடம்பெறுகின்றன.
அவ்வாறான ஒரு நிகழ்வுதான யாழ் இசை விழா 2013. ஆரம்பத்தில் இசை விழா காலியை தளமாகக் கொண்டே இடம்பெற்றது. பின்னர் மோதல்கள் நிறைவடைந்த நிலையில் அதன சகோதர நிகழ்வாக யாழ் இசை விழா யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்றது.
நாடளாவிய ரீதியில் உள்ள பல்வேறு இசைக் கலைஞர்களை ஒன்றிணைத்தும் சர்வதேச கலைஞர்களுடனும் இணைந்து இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது. பல்வேறு இசைகளும் சங்கமிங்கும் அரங்கமாக இந்த இசைவிழா அமைகின்றதென குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
சர்வதேச இசை விற்பன்னர்களும் உள்ளூர் கலைஞர்களும் இணைந்து இந்த இசைவிழாவினை மெருகூட்டுவதனால் இருதரப்பினரிடையேயுமான உறவுகள் பேணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை வடபகுதி, தென்பகுதி கலைஞர்கள் இடையேயும் உறவுகள் பேணப்பட்டு இசையின் மூலம் நல்லிணக்கம் ஏற்படும் எனக்கூறப்பட்டிருக்கின்றது.
இது இவ்வாறிருக்க இந்த இசை நிகழ்விற்குரிய உள்ளூர் கலைஞர்களின் தெரிவும் நிகழ்ச்சி வடிவமைப்பும் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்ற தென்பதனை நோக்க வேண்டும்.
நிகழ்வுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை நிரற்படுத்தும் பணியில் அருஸ்ரீ கலையக இயக்குநர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் உள்ளார். உள்ளூரில் இசைக் கலைஞர்கள் எவ்வாறான வழிமுறையில் தெரிவு செய்யப்படுகின்றார்கள் என்பது குறித்து பூரண விளக்கத்தினைப் பெறமுடியவில்லை.
இசைக் கலைஞர்கள் போட்டிகள் மூலம் தெரிவு செய்யப்பட்டதாகவோ அல்லது பத்திரிகைவாயிலான விளம்பரங்கள் மூலமோ எந்தவிதமான பகிரங்க அழைப்புகள் விடுக்கப்பட்டதாக தெரியவரவில்லை.
இந்த இரு வழிமுறைகளும் தவறப்பட்ட ஏதாவதொரு முறையில் கலைஞர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தால் அது பாரபட்சமான தெரிவுகளாக அமைந்திருக்கும். உள்ளூர்களில் சந்தர்ப்பங்கள் மறுக்கப்பட்டு வாய்ப்பின்றி காணப்படும் இசைக்கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் வழங்கும் அரங்கங்களாகவே பொதுவான அரங்கங்கள் அமைய வேண்டும்.
இல்லாதுவிடில் இந்த நிகழ்வுகளின் உண்மையான நோக்கங்கள் பொய்ப்பிக்கப்பட்டு விட்டதாகவே அர்த்தப்படும். இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் சர்வதேச மற்றும் இலங்கையின் பிரபலமான இசைக் கலைஞர்கள் தாங்குவதற்காக யாழ்ப்பாணத்திலுள்ள ஹோட்டல்கள் முற்பதிவு செய்யப்பட்டு ஏற்பாடு செய்யப்படுகின்றது.
ஆனால், ஏனைய உள்ளூர் கலைஞர்கள் தங்குவதற்கு இதுபோன்ற சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டதா என்பதனை வினவினால் பதில் இல்லை என்பதாகவே அமைகின்றது. யாழ் நகரத்தினை மட்டும் வசிப்பிடமாகக் கொண்ட கலைஞர்கள் மட்டும் இதில் பங்குகொள்ளவில்லை. வன்னி, முல்லைத்தீவு, அம்பாறை, தென்னிலங்கை, கிழக்கிலங்கை போன்ற பிராந்தியங்களைச் சேர்ந்த கலைஞர்களும் இங்கு பங்கு கொள்கின்றனர்.
இவர்களின் தங்குமிட மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்த விடயத்தில் பாரபட்சங்கள் இடம்பெறுவதாகவே கடந்த இசைவிழாவில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
அதேவேளை இன்னொரு முக்கிய விடயத்தினை நோக்க வேண்டும். இத்தனை பெருந்தொகையான எண்ணிக்கையான கலைஞர்கள் கலந்து கொள்ளும் இசை நிகழ்வுகள் இருநாட்களுமாக மொத்தமாக 16 1/2 மணித்தியாலங்கள் மட்டுமே நடைபெறுகின்றது.
இந்தக் கால அவகாசம் ஒரு மாபெரும் இசை நிகழ்வுகளுக்கு திருப்திகரமானதாக அமையுமா. இசை நிகழ்வுகள் வெறுமனே நிமிடக் கணக்கல் இடம்பெறும் குறு நிகழ்வுகளாக அமைந்துவிடக்கூடாது. ஒரு நிகழ்வினை நடத்துவதன் நோக்கம் உண்மையில் அதன் பலன்கள் மக்களை சென்றடைவதில் தான் தங்கியுள்ளது.
குடாநாட்டை பொறுத்தவரையில் அம்மக்கள் கலைக்கு அதிகளவான முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்பது உலகறிந்த உண்மைதான். ஆனால், அவர்கள் களியாட்டங்களுக்கு முக்கியத்துவம் அவ்வளவாக வழங்குவதில்லை. இலங்கையின் தென்பகுதியை எடுத்துக்கொண்டால் அம்மக்களின் வாழ்க்கை முறை வடபகுதி மக்களுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது.
அத்துடன் இதுபோன்ற பொது நிகழ்வுகள் எந்தவொரு தனிநபரையும் புண்படுத்AAதாக வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் அப்பொழுதுதான் அது பயனுள்ளதாக அமையும். அதேநேரம் இந்த இசை விழாக்களில் குடாநாட்டின் சகலபுறங்களிலுமுள்ள கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிகழ்வுகள் ஒழுங்குபடுத்துமிடத்து அதற்கான மக்களின் ஆதரவும் அதிகமாக காணப்படுவதுடன் மக்களின்  வருகையும் அதிகரித்து காணப்படும்.
இதுபோன்ற சாத்தியமான நடவடிக்கைளை எதிர்கால விழாக்களில் இவ்விழா ஏற்பாட்டாளர்கள் கவனத்தில் கொள்வது அவர்களின் விழா சிறப்புற ஆதரவாக அமையும். இந்நிகழ்வுகளில் சர்வதேச கலைஞர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதும் வரவேற்பைத் தருவதுமாக அமைகின்றது. சர்வதேச கலைஞர்கள் இலங்கையில் தமது விற்பன்னத்துவத்தை நிரூபிக்கும் சந்தர்ப்பங்களாக இது அமைகிறது.
அதேவேளை உள்ளூர் கலைஞர்களுக்கு வெளிநாடுகளில் தமது திறமைகளை நிரூபிப்தற்கோ அல்லது வெளிநாடுகளில் பயிற்சிகளை பெறுவதற்கோ வாய்ப்புகள் காணப்படவில்லை என்றே கூறலாம்.
ஒரு சில சந்தர்ப்பங்கள் அதற்கு கிடைத்தாலும் அதன்மூலம் தலைநகரை அடிப்படையாகக் கொண்ட கலைஞர்களே பயன்பெறுகின்றனர். இதுபோன்ற விழாக்களில் இவ்வாறான வாய்ப்புகள் குறித்து பல்வேறு உறுதிமொழிகள் வழங்கப்படுகின்றது. ஆனால், அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத தீர்மானங்களாகவே காணப்படுகின்றன.
இவ்வாறான ‹ழ்நிலைகளில் பொதுமக்கள் ஒரு சிறிதளவேணும் மனக்கசப்புகளை எதிர்கொள்ளாதவாறு இதுபோன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொள்வது வரவேற்கத்தக்கது.
யாழ்ப்பாண இசைவிழா 2013 எவ்வாறு அமையப் போகின்றதென்பதனை அறிவதற்கு இன்னமும் சில வாரங்கள் காத்திருப்பு  தொடர்கிறது..

பூமியின் மிகப் பெரிய மனித ஒன்றுகூடல் மஹாகும்பமேளாவில் 3 கோடி பேர் புனித நீராடல்






இந்தியாவின் இருபெரும் நதிகளான கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் அலஹாபாத்தில் புனித நீராடுவதற்கான இறுதி நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை 30 மில்லியன் யாத்திரிகர்கள் கும்பமேளாவில் கலந்து கொண்டனர். பூமியில் இடம்பெறும் மிகப் பெரிய மனித ஒன்று கூடல் நிகழ்வான இக்கும்பமேளாவில் உள்ள புனித நீராட்டத்திற்கான  ஆறு  நாட்களில் மிகவும் புனிதநாளாக நேற்றைய தினம் கருதப்படுகின்றது. 

இந்த நிகழ்வின் ஆரம்ப தினமான ஜனவரி 14 ஆம் திகதி 8 மில்லியன் பக்தர்கள் புனித நீராடினர்.   கங்கையும் யமுனையும் சந்திக்கும் இச் சங்கமத்தில் புனித நீராடுவதன் மூலம் தமது பாவங்களை நீக்கி மோட்சம் கிடைக்குமென இந்துக்கள் நம்புகின்றனர். 12 வருடத்துக்கு ஒருமுறை வரும் இந்த கும்பமேளாவில் ஜனவரி முதல் பெப்ரவரி வரையான 55 நாட்களில்100 மில்லியன் பேர் நீராடியதாகக் கூறப்படுகின்றது. இம்முறை கொண்டாடப்படுவது 144 வருடத்தில் ஒருமுறை கொண்டாடப்படும் மஹா கும்பமேளாவாகும். 

அலஹாபாத்தின் வட பகுதி நகரில் மிகுந்த பாதுகாப்புக்கு மத்தியில் கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் சர்வதேச நாடுகளிலும் இந்தியாவின் சகல பகுதிகளிலிருந்தும் வருகை தந்து கலந்து கொண்டுள்ளனர். பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நேற்று மட்டும் 14 ஆயிரம் பொலிஸார், துணை இராணுவத்தினர் , தளபதிகள் கடமையில் ஈடுபட்டிருந்தனர். 
இம்முறை போல் முன்னொரு போதும் மக்கள் கூட்டம் கலந்து கொண்டிருக்கவில்லையென பொலிஸ் தலைமை அதிகாரி ஏ.ஆர்.கே.எஸ். ரத்தோஸ் கூறியிருந்தார். சனிக்கிழமை மட்டும் 12 மில்லியன் பேர் வருகை தந்திருந்ததாக அவர் கூறியிருந்தார். இவர்கள்  அனைவரும் ஞாயிற்றுக்கிழமை நீராடுவதற்காக இங்கேயே தங்கியிருந்தனர். வரலாற்றில் முதற் தடவையாக பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் கலந்து கொண்டனர். சனக் கூட்டத்தை மிகவும் தெளிவாகக் காண்பதற்காக குதிரைகளில் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். பரந்த வெளி எங்கும் மனிதக் கடலையே எம்மால் காணமுடிகின்றதென்றார். 

                 இந்து பாரம்பரியத்தின் படி ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடுவது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகின்றது. ஆற்றங்கரையோரங்களில் 18 இடங்களில் இப் புனித நீராடல் இடம்பெறுகின்றது. இக்கும்பமேளா தொடர்பாக ராஜ்குமார் சிங் எனும் பஞ்சாப் அரசு பணியாளர் ஒருவர் கூறுகையில் ; இவ் விழாவில் கலந்து கொள்ள ரயில், பஸ் , கால்நடையென மூன்று தினங்கள் பயணித்தேன். இங்கு புனித நீராடுவதன் மூலம் எனது சகல பாவங்களும் நீங்கி எதிர்காலத்தில் எனது குடும்பம் பாதுகாப்பானதும் செழிப்பானதுமான  வாழ்வைப் பெறுமெனத் தெரிவித்தார். 

14 ஜனவரிக்குப் பின்னரான காலப்பகுதியில் இதுவரை 12 மில்லியன் மக்கள் நீராடியதாக விழா குழுவினர் கூறினர். ஆரம்பம் முதல் இதுவரை அங்கு அமைக்கப்பட்ட 14 மருத்துவமனைகளில் 150,000 பேர் சிகிச்சைப் பெற்றுள்ளனர். பெரும்பாலானவர்கள் சுவாசம், சளி, மூட்டுவலி மற்றும் தூசு ஒவ்வாமை போன்ற நோய்களுக்கே சிகிச்சை  பெற்றுள்ளனரென பிரதான மருத்துவமனையின் டாக்டர் கலிம் அக்மல் குறிப்பிட்டுள்ளார். 

இந்துக்களின் இதிகாசங்களிலேயே கும்பமேளா குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் மூலமும் அங்கேயே உள்ளது. கடவுளும் பேய்களும் அமிர்தம் நிறைந்த ஜாடிக்காக போரிட்ட போது அமிர்தம் சிந்திய நகரங்களான அலஹாபாத் ,நாசிக் , உஜ்ஜயின் மற்றும் ஹரித்வார் ஆகிய நான்கு நகரங்களிலேயே கும்பமேளா நூற்றாண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

இவ்வாறான பெருமை நிறைந்த கும்பமேளாவில் கலந்து கொள்ள இந்து மதத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் அதிகாலை முதல் நீராட ஆரம்பித்திருந்தனர். நீண்ட முக்கோணக் கொடிகள், அம்பு, வில், பதாகைகள் போன்றவற்றுடன் பலர் ஆடியும் பாடியும் மேளங்களை அடித்தும் பக்தி பரவசமாகக் காணப்பட்டனர். அதேவேளை, வேறு சிலர் அலங்கரிக்கப்பட்ட தேர்களிலும் , சிலர் குதிரைகளிலும் வந்தனர். அநேகமானவர்கள் உடலெங்கும் குங்குமம் பூசிக் காணப்பட்டனர். அல்லது வேட்டி தரித்திருந்தனர். 
சாதுக்களில் அநேகமானவர்கள் நிர்வாணமாக உடலெங்கும்  சாம்பல் பூசி நீண்டு சுருண்ட இறுகிய முடியுடன்  புழுதிகளில் உருண்டும் படுத்தும் அங்குமிங்குமாக ஓடி ஆற்றில் நீராடிய வண்ணம் காணப்பட்டனர். ஆகாயத்தை  கூரையாகக் கொண்டு இக்குளிரான காலநிலைக்குள் பல்லாயிரக்கணக்கான ஏழை குடும்பங்கள் அங்கு வசிக்கின்றன. 
இங்கு புனித நீராடுவதும் மிக முக்கியமான பிரார்த்தனையென அசுதேஷ் பண்டே என்ற இளம் பக்தர் ஒருவர் கூறியுள்ளார். நான் இப் புனித நீராடும் போது எனது நாட்டினதும் முழு உலகினதும் நன்மைக்காகப் பிரார்த்தித்தேன் என்று அந்த இளைஞர் கூறினார்.