ஜனநாயக ஆட்சிக்காக ஒன்றிணையுங்கள்

மதக்குழுக்கள் இடையிலான முரண்பாட்டுத் தீர்வு பொறிமுறையே போருக்கு பின்னரான நல்லிணக்கத்துக்கு தேவை



பன்முக கட்டமைப்பை சமூகங்கள் ஏற்கும் வரை 
ஜனநாயக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது
தேசியளவிலும்  சமூக மட்டங்களிலும்  பன்முகத் தன்மையின் கட்டமைப்பினை ஏற்றுக் கொள்வதிலுள்ள சிக்கல்களை தீர்க்கும் வரை சிறுபான்மை குழுக்களின் மனித உரிமைகள் மற்றும் உள்ளக ஜனநாயக பிரச்சினைகளை எம்மால்  தீர்க்க முடியாதென பேராசிரியர்  ராதிகா குமாரசாமி தெரிவித்தார்.
பண்டார நாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் முன்னாள்  ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கா முன்னிலையில் இடம்பெற்ற தெற்காசியாவில் பன்முகப்படுத்தலுக்கான சவால்கள் (இடச்டூடூஞுணஞ்ஞுண் tணி கடூதணூச்டூடிண்ட் டிண குணிதtட அண்டிச் ) என்ற  தொனிப் பொருளில் இடம்பெற்ற கருத்தரங்கில் மதமும் அரசியலும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகையிலேயே பேராசிரியர் ராதிகா குமார சுவாமி இவ்வாறு குறிப்பிட்டார்.
பன்முக கட்டமைப்பை சமூகங்கள் ஏற்கும் வரை 
ஜனநாயக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது

 மதம் அரசியல் இரண்டுக்குமிடையிலான  தொடர்புகள், தலையீடுகள் மற்றும் தவிர்க்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக  பேராசிரியர் தனது ஆழமானதும் பரந்தளவிலுமான கருத்தாழம் மிக்க உரையில் மேலும் தெரிவிக்கையில் ;
 பன்முகத் தன்மை மற்றும் சமூக விடயங்களை அரசாங்கங்கள் வெவ்வேறான வழிமுறைகளூடாகக் கையாளுதல் ஆகிய விடயங்களுடனேயே அரசியலும் மதமும் குறித்த கேள்விகள் தங்கியுள்ளன. மதங்களின் போக்கானது உள்ளூர் மற்றும் தேசிய மட்டங்களில் நிலையான தன்மையினை கொண்டிருக்கவில்லை.
 மதங்கள் பொதுப் பரிமாண தனிமைப்படுத்தலில் மிகவும் தொலைவிலேயே இருத்தல் வேண்டும். அதேவேளை பொதுப் பரிமாணத்தில் மதங்களின் வகிபாகம் தொடர்பான அண்மையை  விதப்புரைகள் தொடர்பாக, குறிப்பாக பெண்களின் விவகாரங்களில் மிகவும் அவதானமாகக் கையாள வேண்டும்.
பொதுப் பரிமாணத்தில் உள்ள நிர்வாகக் கட்டமைப்பானது முரண்பாடுகளின் தீர்வுக்கான பொறிமுறை நடவடிக்கையாக மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே மதம் அரசியல் என்ற விடயத்தினை நான் ஆராய முற்படுகின்றேன்.
அறிமுகம்
 நவீன உலகத்தில் பன்முகத் தன்மையின் பிரச்சினைகளின் கவன ஈர்ப்பின் கீழேயே சமகால அரசியலில்  மதங்களால் குழப்பங்கள் ஏற்பட்டன.
பால், வகுப்பு மற்றும் சாதி ஆகியவற்றுடன் வேற்றுமைகளுக்கான  அங்கீகாரம் அல்லது பன்முகத் தன்மையானது, தெற்காசிய சமூகங்களை பிரித்து வேறாக்குவதற்கு அச்சுறுத்தலாகவுள்ள அரசியலையுடைய தெற்காசியாவில் பாரிய தவறான விடயமாக உள்ளது. பன்முகத் தன்மையானது சகிப்புத் தன்மைக்கான பொதுவான தேவையுடன் இணைந்துள்ளது. வெவ்வேறானவைகளை மதிதித்தல் மற்றும் சகிப்புத் தன்மைக்கான அழைப்பானது தெற்காசிய சமூகங்களில் அபிவிருத்தி அடைந்த நிலைக்கான இலக்குகளில் பதற்றமான  தன்மையினையே கொண்டமைந்துள்ளது.
அபிவிருத்தி அடைந்த நிலை என்பது தேசிய இறையாண்மை மற்றும் அதிகார மத்தியஸ் தானத்திலும் தங்கியுள்ளதுடன் இதனால் ஆட்சியில் நுழைந்தவர்கள் அல்லது வெளியேறியவர்களால் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சி நிரலுடனான பொருளாதார திட்டங்கள் மற்றும்  ஆட்சியில் கட்டுப்பாடுகள் ஏற்படுகின்றன
அரசாங்கங்கள் தமது அரசியல் தளத்தினைப் பலப்படுத்துவதற்காக  அடிமட்டத்திலுள்ள சமூக உண்மைத் தன்மையானது, அதிக பன்முகத் தன்மை பல்  கலாசாரம் மற்றும் பல் இனக் குழுமம் ஆகியவற்றினை வழங்கும் நிலையில் பெரும்பான்மை சமூகத்தின் ஒரே குறியீட்டினை அரசாங்கம்  அணிந்து கொள்வதற்கான நிலையினை அடைவதற்காக அராசாங்கங்கள் தமது கருத்துக்களை வலுவாக்குவதற்காக அடிக்கடி வளர்ச்சி நிலையினை பயன்படுத்தியிருந்தன.
 இந் நிலையில் மனித உரிமை விவகாரங்கள் குறித்த எனது பின்னணியின் அடிப்படையில் நவீன வளர்ச்சி   கண்ட நாடுகளின் ஒரே மாதிரியான  உந்து சக்திசிறுபான்மையின மக்களின் உரிமைகளுக்காகப் போராடுதல் மற்றும் சமூகத்தில் அவர்களின் அங்கீகாரம்எங்கும் அனைவரும் தனிப்பட்ட சமமான உரிமையை உணரும் மற்றும் நாட்டின் சகல விடயங்களிலும் அனைவரும் சம பங்களிப்பினைக் கொண்டிருக்கும் பன்முக, பல் மத, பல் கலாசார சமூகங்களின் பூரண  உரிமைகளுக்கும் அனுமதியளிக்கும்  கட்டமைப்புக்களையும் சட்டங்களையும் உருவாக்குதல் ஆகிய விடயங்களுக்காகப் போராட நான் தயங்க மாட்டேன். எம்மால் தவிர்த்து நீக்க முடியாத பன்முகப்படுத்தலின் குழப்பங்களையும் நாம் ண்மையான நேர்மையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் . சமூகக் குழுக்கள் மற்றும்  சிறுபான்மை மக்கள் இடையே காணப்படும்  உள்ளக  இயற்கை  விளைவுகள் அதிகரித்துள்ளன. இது  மிகமோசமான சிக்கல்களைக் கொண்டதாகும். இதனால் ள்ளக மனித உரிமைகள் மற்றும் உள்ளக ஜனநாயகத்தில் சிக்கல்களை தோற்றுவிக்கின்றதுடன் குழுக்களிடையில் சிறுபான்மை  மக்களினது உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகளிலும் அடிக்கடி தொடர்புடைய விடயமாகவுள்ளது.
சமூகங்களில் பாரிய அளவிலும் தேசிய மட்டங்களிலும் பன்முகத் தன்மையின் கட்டமைப்பினை ஏற்றுக் கொள்ளுதல் மற்றும் உருவாக்குதல் ஆகிய பழைய  சிக்கல்களை நாம் தீர்க்கும்  வரை சிறுபான்மைக் குழுக்களிடையில் மனித உரிமைகள்  மற்றும்  உள்ளக ஜனநாயக  பிரச்சினைகளை எம்மால் பூரணமாக தீர்க்க முடியாது என்பதனை இந்தியாவில் பெண்கள் உரிமைக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பின் போடப்பட்டதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும்
மதம்  ஒரு முன்னோக்கு 
 மதம் அரசியலுடன் கொண்டிருக்கும் தொடர்பு மற்றும் பன்முகத்தன்மை   ஆகிய விடயதானங்களுக்கு முன்னர் மதமும் ஆன்மீகமும் குறித்து குறிப்பிட வேண்டும். இவை இரண்டும் ஒன்றல்ல. ஆனால்இரண்டுக்கும்  இடையில் பலமான உறவு உண்டு. குறிப்பாக நவீன  உலகில் அந்த உறவு காணப்படுகின்றது. அத்துடன் இவை இரண்டுக்கும் இடையிலான தெளிவான எல்லையினை வரைவது மிகவும் சிக்கலான விடயம்.
தூய்மையான பொருட் பதங்களில் நாம் மத அரசியலைக் கண்டுள்ளோம். தமது நலன்களை முன்னேற்றுவதற்காக மதங்களை  பல்வேறு குழுக்கள் பயன்படுத்துகின்றதனை நாம் அறிவோம்.
வைதீக மற்றும் அடிப்படை வாதங்களிலிருந்து மதங்களை வெளியேற்றும் முயற்சிகள் தோல்வி அடைந்திருப்பதனை அண்மைய ஆய்வு முடிவுகள் வெளிக்காட்டுகின்றன. மேற்குலக திருச் சபைகளின் சமாசங்கள் மற்றும் பாரம்பரிய திருச் சபைகளில்  மதகுருமாரைப் பணிக்கமர்த்தல் ஆகிய விவகாரங்களில் சிக்கல்கள் உருவாகியுள்ளன.
நிலைய மயப்படுத்தப் பட்ட மதங்களிடையிலான புறக்கோட்பாட்டுப் பாரம்பரியங்களை அடிக்கடி கொண்டாடும்  பரந்தளவிலான  ஆத் மீகம், அடிப்படை வாதக்  கட்டமைப்பின் இணக்கமின்மையைக் கடுமையாக எதிர்க்கின்றது.
மகாத் மா காந்தியின் இந்து மதம் அஷிஷ் நந்தியால் முன்னிலைப்படுத்தப்பட்டது. ஞானாநாத் ஒபய சேகரவின் பௌத்தம் மற்றும் இஸ்லாத்துக் கிடையிலான சூபி பாரம் பரியம் ஆகியவை பல்வேறு நவீன சிந்தனையாளர்களாலும் சமய குருமார் அற்றவர்களாலும்  கொண்டாடப்படுகின்றன.
பல் மத சமூகங்களில் காணப்படும் பரந்த ஆத்மீகம் மக்கள் பல்வேறு அடையாளங்களையும் மதச் சடங்குகளையும் உள்வாங்கும் பெறுபேறுகளை  உருவாக்குகின்றது.
பல்மதப் பற்றாளர்கள், பௌத்த விகாரை, திருச் சபைகள், இந்து ஆலயங்கள் மற்றும்  மசூதிகளில் சென்று வழிபடுவதற்கு அசௌகரியமான நிலைமை காணப்படமாட்டாது.
ஆனால், விமர்சகர்கள் இதனை சவால்களை எட்டுவதற்கான வழிமுறையென விமர்சிக்கலாம். ஆனால், மக்கள் தமது பூஜைகளையும் வழிபாடுகளையும் தொடர்ந்து கொண்டிருப்பர்.


மதப் பெரும்பான்மைவாதத்துக்கு அரசாங்கம் ஆதவளித்தால்
 விளைவுகள் பயங்கரமானவையாக அமையும்

ஜொக்  ஸ்ரிராட், டாக்டர் மார்க் எப்ஸ்ரெயின் போன்ற புலமையான எழுத்தாளர்களின் ஆத்மீக நோக்கானது, சகல  மதங்களிலிருந்தும் உருவான அதேவேளைசகலரதும்  நம்பிக்கைகளையும் சிந்தனைகளையும் கொண்டிருக்கும் அழகினை நாம் அவதானிக்கலாம்.

டெஹிஎலவில் நீலக்கல் கண்களுடன்  புத்தபகவான்கண்டியிலுள்ள திருத்துவ கல்லூரி திருச்சபையின்  கட்டமைப்பு மற்றும்  உள்ளக வடிவமைப்புஇலங்கையிலுள்ள கையால்  எழுதப்பட்ட புனித குர்ஆன்  மற்றும்   கொழும்பு நூதனசாலையிலுள்ள  சோழர்களின்   வெண்கல சிலைகள்  அவற்றில் சிலவாகும்.
இதேபோல தம்புள்ள குகைகளிலுள்ள ஓவியங்கள் இதே ஆத்மீக உணர்வினை அடிக்கடி வெளிப்படுத்துபவையாக  உள்ளன. ஆனால் இவைகள்  மதங்களுடன்    தொடர்பற்றவை  என பலர் கூறலாம்காரணம் நாம் மதங்கள் மற்றும் ஆத்மீக பிரிவுகளை  மட்டுப்படுத்தியுள்ளோம்.
ஆத்மீகத்தின்  ஆழத்தினை நாம் கண்டறிவதற்கு ஏன் விநோதமான பயணங்களை  மேற்கொள்ள வேண்டும். .நா.வில்  பணிபுரிந்த  எனது சிந்தை குழப்பமடைந்திருக்கலாமென நீங்கள் கருதக்கூடும். மதத்தையும் ஆத்மீகத்தையும்  நிலையானதாக்க முடியாதென்பதனை எனது சர்வதேச அனுபவத்தின் மூலம்  வெளிப்படுத்தவே இவற்றினைக் கூறுகின்றேன்.
மதமும்  ஆத்மீகமும்  தனது கொள்கைகளையும்  செயற்பாடுகளையும்   தொடர்ச்சியாக  மாற்றிய  வண்ணமே உள்ளன. நவீன காலத்தில் புதிய மற்றும் புதுமையான விளக்கங்கள் ஒவ்வொரு நாளும் தோன்றிய வண்ணமே உள்ளன.
எந்தவொரு சமூகத்தையும் தோற்றுவிப்பதற்கான முக்கிய விடயமான  இந்த சுதந்திரம் குறித்த ஒரு மதம்  அல்லது ஆத்மீக வடிவத்தினை வலுசேர்க்க நினைக்கும் அரசியல் ஏற்பாடுகளால் நசுக்கப்படக்கூடாது.
மதப்பெரும்பான்மை வாதம்
மதங்கள், அரசியல் ஆகியவற்றின் தொடர்புகளை விவாதிக்கும்போது ஒருநாட்டில் அரசின்  ஆதரவுடனான பெரும்பான்மை மதத்துக்கும் சிறுபான்மை மதத்துக்கும் இடையிலான முக்கிய வேறுபாட்டினையும் விரிவாக ஆராயவேண்டும்.
  தெற்காசியாவில்  காணப்படும்  மத பெரும்பான்மைவாதம்  அரசினால் ஆதரவளிக்கப்படுமானால் அது பயங்கரமான விளைவுகளை தோற்றுவிக்கும்.
1980, 1990 களில் இடம்பெற்ற வன்முறைகள்  இவ்வாறான சூழ்நிலையில்  என்ன நடந்ததென்பதனை விரிவாகக் கூறும் உதாரணங்களாகும்ஆனால் இவை முன்னைய யுகங்களில் இடம்பெற்ற தன்னிச்சையான கலவரங்கள்  அல்ல. இவற்றை  ‘உற்பத்தி செய்யப்பட்ட கலவரம்அல்லதுஒன்று கூடி  மேற்கொள்ளப்பட்ட கலவரம்என்று அஹீஷ் நந்தி கூறுகின்றார்.
தெற்காசிய நாடுகளில் இன்றும் பெரும்பான்மை சமூக மதப் போராட்ட அமைப்புக்கள்  சட்டரீதியான தண்டனை விலக்குடனும் அரசுடன் தொடர்புள்ள நிழல்களுடன் உலாவித்திரிகின்றன.
அரசின் இறுக்கமான கட்டுப்பாடுகள் மற்றும் பெரும்பான்மையின  அச்சுறுத்தல்களின் சேர்க்கை  காரணமாக  சிறுபான்மை  தனிநபர்கள்  அதிகாரமற்றவர்களாகவும்  நலிவடைந்தவர்களாகவும்  ஆக்கப்படுகின்றனர். பயங்கரவாதத்துக்கு  அடுத்தபடியான மிகையான  வடிவமாக  தெற்காசியாவில்  இது  காணப்படுகின்றது.
மதப்பெரும்பான்மை வாதத்தின்  சிறந்த ஒரு விடயம் யாதெனில்,   அரசாங்கம் மதங்களை  ஆக்கபூர்வமாக  மறுசீரமைக்க விரும்பினால் அதனை செய்வதற்கு  அரசியல் பலமும்  நம்பிக்கையும் அதற்கு உண்டு.
பெரியார் போன்ற சிந்தனைவாதிகளின்  ஆதிக்கத்தின் பின்னர் நேருவின் வழிகாட்டல்களின் கீழ் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் தீண்டாமை மற்றும் சாதி பாரபட்சத்தை ஒழித்தல், சாதி எதிர்ப்பு  சட்டத்தை வலுப்படுத்தல்தலித்  சமுதாயத்தினரையும்  சகல ஆலயங்களுக்குள்  அனுமதிக்கும் வகையில்  ஆலயங்களை திறத்தல்ஏனைய  சில விடயங்களுடன்  இந்துக்கள் அனுமதிக்கப்பட வேண்டுமென்ற தனிநபர் சட்ட மூலங்களை மாற்றுதல், பெண்களை சம உரிமையுடன் நடத்துதல், மிருக மற்றும் பறவை  பலியிடுதலை  தடுத்தல் ஆகியவற்றுக்கான  சட்டத்திருத்தங்களை இந்தியா அமுல்படுத்தியது.
இதேவேளைஇலங்கையில் முன்னேஸ்வரம் போன்ற  ஆலயங்களின்  மிருக  பலியினை தடுப்பதற்கும் பெண்களுக்கான  சம  உரிமைகளை வழங்குவதற்கும்  தமிழ் சமுதாயத்தினரின்  தனிப்பட்ட சட்டங்களை மாற்றுவதில்   அரசாங்கம் தயக்கம்  காட்டுகின்றது.
களனி பாராளுமன்ற உறுப்பினரின்  நோக்கினை நான் அடையாளப்படுத்த விரும்பவில்லை. ஆனால் அவரின் ஆதரவானது நாம் எதிர்நோக்கும்  குழப்பத்தை நோக்கியதாகவே உள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் அரசாங்கம் தற்போதைய அரசியல் நிலைவரம்அதியுயர் உணர்வுகள், தமிழ் சமுதாயத்தின்  பிரபல  உறுப்பினர்கள் ஆகியவற்றின்  காரணமாக அரசாங்கம் தலையிடத்தவறினால் அது  அரசின் இரட்டை நிலைப்பாடு, தொந்தரவு  மற்றும் தலையிடுவதிலிருந்து அரசு விலகியிருத்தல் ஆகிய நிலையாகவே கருதப்படும்.
மதத்தையும் அரசியலையும் இங்கு நாம் எவ்வாறு பெற்றோம்
அரசியலுக்கான மதத்தின் தொடர்பு  மற்றும்  எதிர்கால  சிந்தனைகள் பற்றி நோக்கினால் அமைதியான மதச் சர்ச்சைகளுக்கான  வழிமுறைகள்  தம்மைப் பற்றிய எந்த அறிவிப்பினையும் கொண்டிருக்கவில்லையென தோமஸ் ஜெபரிசன் தனது  ஒரு நூலில் கூறியுள்ளார்.
அரசியலில் மதங்கள் குளறுபடியான ஒரு வர்த்தகமாகவே இருந்ததுஆனால்  அவர் அதன்  ஒரு பகுதியாக  இருக்க விரும்பவில்லைஇந்த வர்த்தகத்திலிருந்து  அரசை நீக்குவதற்கு  மதச்சார்பின்மை ஒரு உணர்வு  ரீதியான விடையாக இருக்கலாம். அது பகுத்தறிவு வடிவத்தில் சமமாகவும்  சமதூரத்திலும் தனது நடவடிக்கைகளை  செயற்படுத்த உதவும். ஆனால் அளவுக்கு அதிகமான அதிகாரங்களையுடைய மதங்களும் மதச்சார்பான  நிறுவனங்களும்  உள்ள  தெற்காசியாவில்  அது துர்அதிஷ்டவசமாக  சாத்தியமானதல்ல.
சுதந்திரத்தின்போது  இலங்கையும் இந்தியாவும் நேருவின்  இணக்கப்பாட்டினை பரந்த உணர்வுடன் அங்கீகரித்திருந்தன.தாராளவாத அல்லது சமூக உலக நோக்கின் ஆதிக்கமுடைய சட்டங்கள், கட்டமைப்புகள்  மற்றும்  பெறுமானங்கள்  பொதுவாழ்க்கையை ஆட்சி செய்யும். பொருளாதாரமானது  முதலாளித்துவம் மற்றும்  சமூகவியலால்  ஆளப்படும்  நாடானது  எந்த மதத்தினதும் கையேட்டினை தாங்கிச்செல்லக்கூடாதுசாத்தியமான வழியில் சமநிலையாக பயணிக்க வேண்டும்.விஞ்ஞானமும் பகுத்தறிவுமே மிகவும் உயர்வானதாகும்.
இலங்கையில் 1972 அரசியலமைப்பின்  பிரகாரம்  பௌத்தம்  முக்கிய இடத்தினை பெறுகின்றதுஇருந்தபோதும்  உத்தியோகபூர்வமான மதமாக  இருக்கவில்லை. ஆனாலும் இதனால்  இலங்கை  ஒரு மதத் தலைமுறையைக் கொண்ட  நாடாக மாறுமென விமர்சகர்கள் விவாதித்தனர்.
மதக்குழுக்கள் இடையிலான முரண்பாட்டுத் தீர்வு பொறிமுறையே
 போருக்கு பின்னரான நல்லிணக்கத்துக்கு தேவை 
பௌத்த மதத்துக்கு அரசியல் அமைப்பில் (1972)  வழங்கப்பட்ட  முக்கியத்துவமானது அரசின் ஆதரவுடனான பௌத்த நிறுவனங்கள் மற்றும் அரசின் அரங்குடனும் குறியீட்டுடனும் செயற் திறன் மிக்கவையாக அமைய வேண்டும்.இல்லாதுவிடில்  நேருவின்  இணக்கப்பாட்டினை பின்பற்றியிருக்க வேண்டும். அரசியல் மயப்படுத்தப்பட்ட பொருளாதார முடிவுகளை மேற்கொள்ளும் நாளாந்தச் செயற்பாடுகளில் மதம் ஒரு பகுதியாக  இல்லை என்பது புரிந்துணரப்பட்ட ஒரு விடயமாகும்.
குடும்பங்களிலுள்ள தனிநபர்களின் வாழ்வினை வரையறுக்கும் வகையில் ஏனைய மதங்கள் சமூகங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட தனிநபர் சட்டங்கள் தொடர்ந்தும் பூரணமாக அமுலாகாதவையாகவே உள்ளன.
இந்தியாவைப் போலல்லாது இலங்கையில் மதங்களுக்கான இடமானது குறிப்பாக பாரிய மதங்கள், மிகவும் பலமாகவும் செல்வாக்குள்ளவையாகவும் உள்ளன. அத்துடன் எந்தவொரு அரசியல்வாதியும் தைரியத்துடன் தமது உணர்வுகளை குழப்ப முடியாது.
நான் முன்னர் குறிப்பிட்டதனைப் போன்றே மதச் சமூகங்களின் மிகமுக்கியமான பிரச்சினையாக, மதங்கள்  உள்ளக ஜனநாயகத்தினை  இழந்திருப்பதுடன் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறு மாநிலங்களில் பிறந்தவர்கள் ள்ளிட்ட தமது உறுப்பினர்களின் உரிமைகளையும் அடிக்கடி துஷ்பிரயோகம் செய்வதாக அமைகின்றது.
அரசியல் செலவினங்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் நலிவடைந்துள்ளமை காரணமாக மத விவகாரங்களில் அரசுகள் தலையிட  அச்சமடைந்திருந்தன.
மதமும் அரசியலும்  : எதிர்காலம்
 தெற்காசியாவில் 1990 களில் ஆரம்பித்த அசாதாரணமான மத மறுமலர்ச்சியானது வெற்றிக் குரிய வடிவங்களுடன் இன்று வரை வீறு நடை போடுகின்றது. மதத்திற்கும் அரசியலுக்குமான தொடர்புகள் சம்பந்தமாக நாம் பெற்ற வரலாற்றின் காரணமாக  பல்வேறு அடிப்படைகளின் ஒருமைப்பாட்டுக்கு இது காரணமாக அமைந்தது.
பல்வேறு புலமையாளர்கள் எழுத்தாளர்கள் தெற்காசியாவில் மதங்கள் வலுவான  பரிணாமத்தினைக் கொண்டிருப்பதாகக் கூறியிருந்தனர். பலர் தமது வாதங்களை விமர்சன மட்டத்திலேயே வைத்திருந்தனர். ஆனால் பார்த்த சட்டர்ஜி அதற்கு அப்பால் சென்று  மதங்களுக்கும் அரசியலுக்கும்  இடையில் இறுக்கமான உறவுக்கு வலியுறுத்தியதுடன் ஒவ்வொரு மதமும் தமக்கென ஒரு பாராளுமன்றைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இப் பாராளுமன்றத்துக்கு சுயாதீன முறையில் உறுப்பினர்களைத் தெரிவு செய்து அந்த அமைப்பு சட்ட விதிகளுடன் இயங்க வேண்டும். தேசிய நலன் குறித்த முடிவுகளை மேற்கொள்ளும் அதிகாரம் அந்தப் பாராளுமன்றத்துக்கு  இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்றைய மதங்களுக்காக பாராளுமன்றங்களை உருவாக்குவது மதங்களை வலுச் சேர்ப்பதாக அமையும். ஆனால், அதிவேக மாற்றங்கள் காணும் உலகில் புறக்கோட்பாடு ஆத்மீகத்தினை சிறு அளவில் கூட அங்கீகாரிக்க முடியாததாக அது அமையும்.
தெற்காசியாவில் பெண்கள் அமைப்புகள் கடந்த 4 வருடமாக பொது தனியார் கீர்த்தியினை முறியடிப்பதற்காகவே பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தனரே தவிர மதங்களுக்கு ஆதரவளிப்பதற்காகவல்லஆனால், பெண்களுக்கு எதிரான பாரபட்சமான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் தனிநபர் சட்ட முறைமைகளுக்குப் பதிலான சீரான சிவில் கோட்பாடுகளுக்கான போராட்டம்  பெண்களை நோக்கிய வன்முறையகளாக கலாசார நடவடிக்கைகள், மத நடவடிக்கைகளைக் கண்டித்தல் மற்றும் தடை செய்தல் ஆகியவற்றுக்கான போராட்டத்துக்காக பெண்களுக்கு எதிரான  வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருதல் என்ற  சாசனத்தில் உள்வாங்கப்பட்டுள்ள தாராளமய மற்றும் சமூக பெறுமானங்களை தனிமைப்படுத்தப்பட்ட உலகிற்கு கொண்டு வரும் எதிர்மறை முயற்சியாகவே அவை அமைந்தன. பெண்களின் நவீனத்துவம் சுதந்திரமான நடமாட்டம் மற்றும் பெண்களை சிறுவர்களாக கருதி நடத்துதல் ஆகிய கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெண்கள் சில சமயங்களில் ஆண்களை கவரும் பிசாசுகளாக நடப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
அரசியலில் நுழையும் மத ஆளுமையினை நாம் கொண்டுள்ளோம். புதிய நிலைய ஏற்பாடுகளின் சகல வடிவங்களினதுமான குறைகளை நாம் செவிமடுத்துள்ளோம். இதில் பலவுக்கு எமது முன்னணி புலமையாளர்கள் ஆதரவு வழங்குகின்றனர். ஆழமான மத நம்பிக்கையை கொண்டிருக்கும் தெற்காசியாவில் உலகினால் எதிர்க்கப்படும்   அதேநேரத்தில் உள்ளூருக்கு அவசியமான விடயங்களே இதுவென அவர்கள்  கூறுகின்றனர்.
அரசியலுக்கும் மதத்துக்கும் இடையிலான உறவுக்கான ஆக்கபூர்வமான தீர்வுகளை தேடுவதற்கு இவ்வாறான உணர்வு பூர்வமான விடயங்களுடன் நான் அனுதாபப்படுவதாகக் கூறுகின்ற  போதும் பொது வாழ்க்கையில் மதத்துக்கு எந்தவிதமான முன்னணி வகிபாகத்தினை வழங்குவதில் நான் ஆழமான பற்றற்ற நிலையினை  கொண்டிருக்கின்றேன்
குறியீட்டு வடிவத்துக்கு அப்பால் நாட்டின் அரசியல் நடவடிக்கைகளுள் மதத்தினை நிறுவன மையப்படுத்துவது எதிர்மறையான வாய்ப்புகளையே உருவாக்கும்.
உடனிருத்தல் மற்றும் ஆத்திரமூட்டல் இடையிலான சமநிலைக்கு மிகவும் எளிதாக இடையூறு விளைவிக்கப்படலாம். ஆனால், அதன் பெறுபேறானது வன்முறை மற்றும் மிருகத்தன்மைக்கு   வழிவகுக்கும். கிராமத்தவர் அல்லது  பிரஜை ஒருவரின் நற்குணத்தினை எப்பொழுதும் பிரபலமாக்குவதன் மூலம் எம்மை நாமே முட்டாள்கள் ஆக்குகின்றோம்இன, மத முரண்பாடுகளுக்கு தீர்வு காண முடியாது . ஆனால், அவற்றினை முகாமைத்துவப்படுத்தலாமென புலமையாளர்கள் நீண்ட காலமாக கூறி வருகின்றனர்.   இந் நிலையில் முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பதற்கான பொறிமுறையானது மதக் குழுக்கள் மத்தியில் விசேடமாக சமூக மட்டத்தில் எமக்குத் தேவைபோருக்குப் பின்னரான நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு மட்டுமல்லாது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மேலெழும் ஒவ்வொரு  ஆத்திரமூட்டும் செயற்பாடுகளின் போதான வன்முறைகளை தடுப்பதற்கு இந்த பொறிமுறையானது அத்தியாவசியமானதாகும்.
இவ்வாறான முரண்பாட்டுத் தீர்வு பொறிமுறையானது சட்டத்திற்குள் எழுதப்படும் அதேவேளை, அந்த செயற்பாட்டினை உறுதிப்படுத்தி ஊக்குவிப்பதில் அரசாங்கம் ஆர்வத்துடன் செயற்பட வேண்டும் . இலங்கையின் ö தன் பகுதியில் மத முரண்பாட்டு பதற்றங்கள் இன்றைய  காலப் பகுதியில்  காணப்படும் நிலையில் இவ்வாறான நடவடிக்கைகள்  மூலமே அதற்கு தீர்வு காண வேண்டும்.
முரண்பாட்டுத் தீர்வுக்கான செயற்றிறன் மிக்க பொறிமுறையானது  சகல வழிகளிலும்  எமக்குத் தேவை.
இதற்கு அப்பால் எந்தவொரு சட்ட அமைப்போ அல்லது அமைப்புகளோ மதத்தினை பொது வாழ்க்கை மற்றும் அரசியல் ஆகியவற்றுக்குள்  உட்செலுத்துமென என்னால் அறிவுறுத்த முடியாதுமுரண்பாடுகளுக்கான தீர்வென்ற ரீதியில் நாம் முரண்பாடுகளை முகாமை செய்வது ஒரு தொழில் நுட்ப ரீதியிலான நிறுத்த இடைவெளி . நிரந்தர கோபத்தினை நிரந்தரமாக நீக்க வேண்டுமென நாம் உண்மையில் விரும்பினால் இலங்கையின் பிரபல புலமையாளர்  ஆனந்த ஒபய சேகர  தெற்காசியாவில் இன, மத, முரண்பாடுகள் குறித்து  எழுதிய வழிமுறையிலான மரபுரிமை வழியில் செல்ல வேண்டும்.
மரபுரிமை முறைமை என்பது கடந்த கால மத அனுபவங்கள் மற்றும் கருதுகோள்கள் குறிப்பாக சகிப்புத் தன்மையின்மை, பிரத்தியேகம் மற்றும் வெறுப்பு ணர்வு என்பவற்றுக்கான தீர்வுகளை கையாள வேண்டிய வழி ஆகும்.
இது பெனடிக்ற் அன்டர்சன் அடிக்கடி கூறிவரும் சமூக  வலையமைப்புக்கள், ஊடகம்  மற்றும் கல்வி என்ற ஆயுதங்கள் மூலமே சாத்தியமாகும். நிச்சயமாக இந்த நீண்ட செயற்பாட்டுக்கு பல தசாப்தங்கள் எடுக்கும் அதேநேரம் அரசியல் பொருளாதாரத்தில் அவசியமான மாற்றங்களுடன் இணைந்திருக்கவும் வேண்டும். இந்த மரபுரிமையற்ற தாக்குதல் அரசின் தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால், அரசாங்கம் அதனைச் செய்யத் தவறும் பட்சத்தில் அது கல்வியாளர்கள், சிவில் சமூகம், அரசியல்வாதிகள் மற்றும் சாதாரண பிரஜைகள் என்ற அனைவர் மீதும், அதனை சாத்தியமான வழியில் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இயல்பாகவே விடப்படுகின்றது. அந்தப் பொறுப்பினை நாம் அனைவரும் ஏற்க வேண்டும்.
நிறைவு.